நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட தாத்தா உயிரிழந்த வழக்கு: சிக்கின் ரைஸில் பூச்சி மருந்து கலந்த பேரன் கைது 

சென்னை: 

நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட தாத்தா பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் சிக்கன் ரைஸில் பூச்சி மருந்து கலந்த பேரன் காவல்துறையினரால் கைது செய்யப்பாட்டார். 

கல்லூரி மாணவரான பகவதி என்பவரைக் காவல் துறையினர் கைது செய்தனர். பழக்க வழக்கங்களை தட்டிக்கேட்டதால் சிக்கன் ரைஸில் பூச்சி மருந்து கலந்ததாக பகவதி வாக்குமூலம் அளித்தார். 

இந்நிலையில் , உணவகத்தில் பார்சல் வாங்கி வந்த சிக்கன் ரைஸைச் சாப்பிட்ட தாய் நதியா மற்றும் தாத்தா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் தாத்தா சண்முகநாதன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். 

உயிரிழந்த முதியவரின் குடும்பத்தினரிடம் நாமக்கல் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset