செய்திகள் தமிழ் தொடர்புகள்
சவுக்குச் சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு
கோவை:
போலீஸ் அதிகாரிகள், பெண் போலீசார் குறித்தும் சமூக ஊடகங்களில் அவதூறு கருத்துகள் தெரிவித்ததாக கூறி, பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரைத் தேனியில் கோவை மாநாகர சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவர் விசாரணைக்காக கோவை அழைத்து செல்லப்பட்டார்.
அப்போது தாராபுரம் அருகே சவுக்கு சங்கரை அழைத்து வந்த போலீஸ் வாகனம் சிறிய விபத்துக்குள்ளானது.
இதில் சவுக்கு சங்கருக்கு லேசான காயம் மட்டுமே என்பதால், முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மாற்று வாகனத்தில் கோவை அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில் அவர் மீது பிணையில் வெளி வர முடியாதது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கோவை மாநாகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையில் பணியாற்றி வந்த சவுக்கு சங்கர் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அரசிற்கு எதிராக பல்வேறு கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
November 5, 2025, 5:08 pm
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
November 4, 2025, 5:04 pm
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மூவர் கைது
November 2, 2025, 5:26 pm
இன்று கல்லறை திருநாள், நாளை முகூர்த்தநாள்: கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் உயர்வு
November 2, 2025, 11:19 am
அதிமுக தலைமைக்கு எதிராக யார் துரோகம் செய்தாலும் நடவடிக்கை: செங்கோட்டையன் நீக்கம் குறித்து இபிஎஸ் விளக்கம்
October 31, 2025, 11:51 am
‘செந்தமிழர் சீமான்’ என்று வாழ்த்தி முழக்கமிட்ட வைகோ: தொண்டர்கள் மகிழ்ச்சி
October 29, 2025, 5:59 pm
