செய்திகள் தொழில்நுட்பம்
நாசா செயற்கைகோள்களுடன் ஏவப்பட்ட ராக்கெட் புறப்பட்ட சில நிமிடங்களில் வெடித்து சிதறியது
வாஷிங்டன்:
புறப்பட்ட சில நிமிடங்களில் நாசா செயற்கைகோள்களுடன் ஏவப்பட்ட ராக்கெட் வெடித்து சிதறியது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த ராக்கெட் தயாரிப்பு நிறுவனம் ஆஸ்ட்ரா. இந்த நிறுவனம் நாசாவுடன் இணைந்து முதல் முறையாக தனது ராக்கெட்டின் மூலம் செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்ப முடிவு செய்தது.
அதன்படி நேற்று புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கனாவெரல் ஏவுதளத்தில் இருந்து ஆஸ்ட்ரா நிறுவனத்தின் ராக் கெட் நாசாவின் 4 செயற்கைகோள்களுடன் விண்ணை நோக்கி பாய்ந்தது.
ஆனால், பூமியில் இருந்த புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ராக்கெட் திடீரென வெடித்து சிதறியது. அதை தொடர்ந்து ராக்கெட்டின் பாகங்கள் அண்டார்டிக் பெருங்கடலில் விழுந்தன.
இதுகுறித்து ஆஸ்ட்ரா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிறிஸ் கெம்ப் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் “எங்கள் நிறுவன ராக்கெட்டின் முதல் பயணத்தில் ஒரு சிக்கலை எதிர்கொண்டோம். எங்கள் வாடிக்கையாளரின் (நாசா) செயற்கைகோள்களை புவிவட்ட பாதையில் நிலைநிறுத்த முடியாமல் போனதற்கு நான் மிகவும் வருந்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
September 15, 2026, 10:13 am
தேசிய நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி மாணவர்களின் திறனை மேம்படுத்தும்
September 10, 2026, 12:42 pm
ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் அறிமுகம்: iPhone18 Pro, 18 Pro Max மற்றும் போல்டபிள் மாடலான iPhone Duo அறிமுகம்
August 31, 2026, 9:40 pm
Apple நிறுவனத்தின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக ஜான் டெர்னஸ் பதவியேற்கிறார்
August 22, 2026, 6:25 pm
கார் கைப்பிடி பிரச்சினை: வரலாறு காணாத அளவுக்குக் கார்களைத் திரும்பப் பெறும் சீனா
August 20, 2026, 4:54 pm
AI இல் பகிரப்படும் ரகசிய விவரங்கள் திருடப்படும் அபாயம்: பொதுமக்களுக்கு அமெரிக்க போலிஸ் எச்சரிக்கை
July 15, 2026, 11:27 am
நாசா விண்வெளி வீரர் அனில் மேனனை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ரஷ்யா வெற்றிகரமாக அனுப்பியது
June 30, 2026, 10:41 am
இனி தொலைபேசி எண்ணின்றி தொடர்புக்கொள்ளும் வசதி: 'Username' வசதியை அறிமுகப்படுத்தும் வாட்ஸ்அப்
June 28, 2026, 8:37 pm
ஜெமினை ஏய்யைப் பயன்படுத்த மெட்டாவுக்கு கூகுள் புதிய கட்டுப்பாடு
June 24, 2026, 12:27 pm
AI யுகத்துக்கு மலேசிய ஊடகங்கள் தயாராகின்றன: Google அறிமுகப்படுத்திய இரு திட்டங்கள்
June 13, 2026, 10:15 am
