செய்திகள் தொழில்நுட்பம்
உலகின் முதல் 'தொழுகைக்கு உகந்த' செயற்கை கால்: மலேசியப் பேராசிரியரின் சாதனைப் படைப்பு
கோலாலம்பூர்:
கால்களை இழந்தவர்கள் தடையின்றித் தொழுகை நடத்துவதற்கும், தரையில் அமர்ந்து எழுவதற்கும் ஏதுவாக உலகின் முதல் 'முஸ்லிம் நேய' செயற்கைக்காலை மலேசியப் பேராசிரியர் டாக்டர் முஹம்மத் யாசித் பஜூரி உருவாக்கி பெரும் சாதனை படைத்துள்ளார்.
மலேசியத் தேசியப் பல்கலைக்கழகத்தின் (UKM) எலும்பியல் நிபுணரான இவரது இந்தக் கண்டுபிடிப்பு, உலக அறிவுசார் சொத்து அமைப்பின் (WIPO) காப்புரிமை அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதுடன், உலகிலேயே இத்தகைய வசதி கொண்ட ஒரே செயற்கைக்கால் இதுவென்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சர்க்கரை நோய், விபத்துக்களால் கால்களை இழந்த நோயாளிகள், தற்போது சந்தையில் உள்ள கனமான செயற்கைக்கால்களைப் பயன்படுத்துவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதைக் கண்டு இம்மாற்றத்தை அவர் தொடங்கியுள்ளார்.
சுமார் 2.3 முதல் 2.5 கிலோ எடை மட்டுமே கொண்ட இந்தச் செயற்கைக்கால், சாதாரண கால்களைப் போலவே கணுக்கால் பகுதியில் அசையும் தன்மையைக் கொண்டுள்ளது.
இதன் மூலம் நோயாளிகள் தொழுகையின் போது இலகுவாக அமர முடியும். மேலும், இது நீர் புகாத தன்மையைக் கொண்டிருப்பதால், கால்களைக் கழற்றாமலேயே பயன்படுத்தவும் முடியும்.
2018-ஆம் ஆண்டு முதல் சொந்த முயற்சியில் தொடங்கப்பட்ட இந்த ஆய்வு, மலேசிய அறிவியல், தொழில்நுட்ப அமைச்சின் (MOSTI) நிதி உதவியுடன் தற்போது முழுமையடைந்துள்ளது.
2021-ஆம் ஆண்டு முதல் சுமார் 40 நோயாளிகளிடம் சோதனை செய்யப்பட்ட இந்தத் தொழில்நுட்பம், தற்போது 2025-ஆம் ஆண்டு முதல் வணிக ரீதியாகச் சந்தைப்படுத்தத் தயாராக உள்ளது. இக்கண்டுபிடிப்பு முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி, யோகாசனம் செய்பவர்களுக்கும், தரையில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும் பெரும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
இந்தச் செயற்கைக்காலைப் பயன்படுத்தி முதன்முறையாகத் தரையில் அமர்ந்து இறைவனைத் தொழுத நோயாளி ஒருவர் ஆனந்தக் கண்ணீர் வடித்த தருணம், தனக்கு மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகப் பேராசிரியர் யாசித் பஜூரி குறிப்பிட்டார்.
லாபத்தை நோக்கமாகக் கொள்ளாமல், நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதையே இலக்காகக் கொண்டுள்ள இக்கண்டுபிடிப்பு, விரைவில் இந்தோனேசியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
September 15, 2026, 10:13 am
தேசிய நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி மாணவர்களின் திறனை மேம்படுத்தும்
September 10, 2026, 12:42 pm
ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் அறிமுகம்: iPhone18 Pro, 18 Pro Max மற்றும் போல்டபிள் மாடலான iPhone Duo அறிமுகம்
August 31, 2026, 9:40 pm
Apple நிறுவனத்தின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக ஜான் டெர்னஸ் பதவியேற்கிறார்
August 22, 2026, 6:25 pm
கார் கைப்பிடி பிரச்சினை: வரலாறு காணாத அளவுக்குக் கார்களைத் திரும்பப் பெறும் சீனா
August 20, 2026, 4:54 pm
AI இல் பகிரப்படும் ரகசிய விவரங்கள் திருடப்படும் அபாயம்: பொதுமக்களுக்கு அமெரிக்க போலிஸ் எச்சரிக்கை
July 15, 2026, 11:27 am
நாசா விண்வெளி வீரர் அனில் மேனனை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ரஷ்யா வெற்றிகரமாக அனுப்பியது
June 30, 2026, 10:41 am
இனி தொலைபேசி எண்ணின்றி தொடர்புக்கொள்ளும் வசதி: 'Username' வசதியை அறிமுகப்படுத்தும் வாட்ஸ்அப்
June 28, 2026, 8:37 pm
ஜெமினை ஏய்யைப் பயன்படுத்த மெட்டாவுக்கு கூகுள் புதிய கட்டுப்பாடு
June 24, 2026, 12:27 pm
AI யுகத்துக்கு மலேசிய ஊடகங்கள் தயாராகின்றன: Google அறிமுகப்படுத்திய இரு திட்டங்கள்
June 13, 2026, 10:15 am
