நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

இனாக்சஸ் மேலாண்மை மென்பொருள் கட்டுமானத் துறையினரின் பணிகளை எளிமையாக்கும்: சிவமணி

கோலாலம்பூர்:

இனாக்சஸ் மேலாண்மை மென்பொருள் கட்டுமான துறையினரின் பணிகளை எளிமையாக்கும்.

Whitemind AI Solutions நிறுவனத்தின் தோற்றுநர் தலைவரான சிவமணி இதனை கூறினார்.

செயற்கை நுண்ணறிவின் உண்மையான சக்தி அதன் தொழில்நுட்ப ஆற்றலை மட்டுமல்ல, நிஜ உலக வணிக சிக்கல்களை  புத்திசாலித்தனமாகவும், நெறிமுறையாகவும் அளவிலும் தீர்க்கும் திறனை எங்கள் நிறுவனம் கொண்டுள்ளது.

மேலும் பினாங்கை தலைமையகமாக கொண்டு வளர்ந்து வரும் இந்நிறுவனம் அறிவார்ந்த ஆட்டோமேஷன், தரவு அறிவியல், இயந்திர கற்றல் மூலம் அடுத்த வளர்ச்சி சகாப்தத்தைத் திறக்கத் தயாராக உள்ள நிறுவனங்களுக்கு சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்டது.

இந்நிலையில் இனாக்சஸ் மேலாண்மை மென்பொருளை கட்டுமானத் துறையில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களுக்காக அறிமுகம் செய்கிறது.

இது சிக்கலான கட்டுமான சூழல்களை எளிமையாக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டது.

மேலும் ஒருங்கிணைந்த பணி ஆய்வுகள், செயற்கை நுண்ணறிவுகளை கொண்டு திட்டமிடுதல் என அனைத்து பணிகளையும் எளிமையாக்குகிறது.

இந்த மென்பொருள் எதிர்கால சவால்களை எதிர்கொள்ள திட்டமிட்ட விநியோகத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இது பணிகளை வேகமாகவும், புத்திசாலித்தனமாகவும், நம்பிக்கையுடனும் மேற்கொள்ள வித்திடும்.

இதன் அடிப்படையில் தான் இன்று கட்டுமானத் துறையில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களுக்கு இனாக்சஸ் குறித்த விளக்கக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

அழைக்கப்பட்ட நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டன என்று சிவமணி கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset