
செய்திகள் வணிகம்
இந்தியாவுக்கு ரூ.7,300 கோடி நன்கொடை வழங்கிய 27 வயது சி.இ.ஓ.
டொரன்டோ:
பிட்காயினுக்கு அடுத்தப்படியாக மிகப்பெரிய அளவில் புழங்கக்கூடிய கிரிப்டோகரன்சி 'எதிரியம்'. அதன் இணை நிறுவனரும், சி.இ.ஓ.,வுமான 27 வயது இளைஞர் விட்டாலிக் பூட்டரின், கொரோனா நிவாரண நிதியாக ரூ.7,300 கோடி மதிப்பிலான கிரிப்டோகரன்சியை வழங்கியுள்ளார்.
கொரோனாவின் 2ஆம் அலையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உலக நாடுகள் பலவும் உதவிக்கரம் நீட்டியுள்ளன. கூகுள் நிறுவனம் ரூ.135 கோடியும், டுவிட்டர் ரூ.110 கோடியும் அறிவித்தன. இது போன்ற பல முன்னணி நிறுவனங்கள் ஆக்சிஜன் சிலிண்டர்கள், தடுப்பூசிகளுக்கு நன்கொடை வழங்கி வருகின்றன. இந்நிலையில் தான் கிரிப்டோகரன்சி இணை நிறுவனர் விட்டாலிக் ரூ.7,300 கோடி நன்கொடை அறிவித்துள்ளார்.
ரஷ்யாவில் பிறந்து கனடாவிற்கு புலம்பெயர்ந்தவரான விட்டாலிக் தனது 19 ஆவது வயதில் கிரிப்டோகரன்சியை உருவாக்கினார். சிறந்த புரோகிராமரான இவர் பணப்பரிவர்த்தனையில் வங்கிகளிடம் அதிகாரம் செல்லாமல், அவை பணம் புழங்கக் கூடிய மக்களிடமே பரவலாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கிரிப்டோகரன்சியை உருவாக்கினார். ஒரு கிரிப்டோகரன்சியின் இன்றைய இந்திய மதிப்பு ரூ.3.1 லட்சம் ஆகும். இவர் 500 கிரிப்டோகரன்சி (ரூ.15 கோடி) நன்கொடை அளித்துள்ளார்.
இந்தியா கிரிப்டோகரன்சி நன்கொடைகளை பெறுவதற்காக கோவிட் கிரிப்டோ நிவாரண நிதி என்ற ஒன்றை உருவாக்கியுள்ளது. அந்த நிதிக்கு கிரிப்டோகரன்சி, பிட்காயின், டோஜ், ட்ரான், காஸ்மாஸ், டெசோஸ் போன்ற பல கிரிப்டோகரன்சிகளை கொண்டு நிதியளித்தால் ஏற்றுக்கொள்வார்கள்.
இதுவரை இந்த நிதியிலிருந்து ஐ.சி.யூ வென்டிலேட்டர்கள் மற்றும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளுக்காக ராஜீவ் காந்தி நினைவு அகாடமிக் நலவாழ்வு அறக்கட்டளைக்கு ரூ.55 லட்சமும், ரவுண்ட் டேபிள் அறக்கட்டளைக்கு ரூ.94 லட்சமும், ஏ.சி.டி. கிராண்ட்ஸ் மற்றும் யுனைடெட் வே ஆப் பெங்களூரு ஆகிய அறக்கட்டளைகளுக்கு ரூ.7 கோடியும் அளிக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 8:09 pm
உலகளவில் அதிக தங்கம் கையிருப்பு வைத்துள்ள நாடுகளில் இந்தியாவுக்கு 7-ஆவது இடம்
April 22, 2025, 10:06 am
தங்கத்தின் விலை 3,400 அமெரிக்க டாலர்களுக்கு மேல் உயர்ந்து புதிய சாதனை அளவை எட்டியுள்ளது
April 17, 2025, 6:11 pm
எஹ்சான் வர்த்தகக் குழுமத்திற்கு இவ்வாண்டு வெற்றி ஆண்டாக அமையும்: டத்தோ அப்துல் ஹமித் நம்பிக்கை
April 15, 2025, 5:40 pm
சிங்கப்பூர், இந்தியா இடையே ஓராண்டில் மட்டும் 5.5 மில்லியன் பேர் விமானப் பயணம்
April 3, 2025, 4:41 pm
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரி விதிப்பு: ஆசியப் பங்குச் சந்தைகள் சரிவு கண்டன
April 3, 2025, 10:46 am
அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பால் ஆசிய பங்குச் சந்தைகள் சரிவு
March 22, 2025, 4:05 pm