செய்திகள் மலேசியா
ஜொகூர் திட்டங்கள் குறித்து அவதூறு: போலிஸ், எம்சிஎம்சியில் டத்தோ ஓன் ஹபிஸ் புகார்
ஜொகூர்பாரு:
ஜொகூர் மாநிலத்தில் உள்ள வளர்ச்சித் திட்டங்கள், பொது வசதிகள் குறித்து தவறான குற்றச்சாட்டுகள் பரப்பப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக, ஜொகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹபிஸ் காசி போலிஸ் நிலையத்தில் புகார் அளித்து, மலேசிய தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையத்திடம் (எம்சிஎம்சி) புகார் அளித்துள்ளார்.
பல நூறு மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள திட்டங்கள், விசித்திரமான, சந்தேகத்திற்குரிய நிறுவனப் பெயர்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளைப் பதிவேற்றிய பல சந்தேகத்திற்கிடமான சமூக ஊடகக் கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
அவற்றில் பெரும்பாலான கணக்குகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வாக்கியங்களையும் கதையாடல்களையும் பயன்படுத்தியதும், மேலும் அவற்றுக்குப் பின்தொடர்பவர்கள் இல்லாததும் மிகவும் சந்தேகத்திற்கிடமானது என்று அவர் கூறினார்.
ஜொகூர் மக்களிடமிருந்து வரும் விமர்சனங்கள், குறைகள், புகார்களை நான் எப்போதும் வரவேற்கிறேன்.
ஒவ்வொரு புகாரும் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆனால் அது பொய்யான குற்றச்சாட்டுகளாக இருக்கக் கூடாது என அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 16, 2026, 4:54 pm
பிரதமரிடம் திடீர் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு அறிவுறுத்தல்
November 16, 2026, 4:51 pm
பத்துமலையில் நூலகத் திறப்புடன் முப்பெரும் விழா; நவம்பர் 22ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறுகிறது: டான்ஸ்ரீ நடராஜா
November 16, 2026, 4:11 pm
தனியார் பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய மாணவன் கூச்சிங் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டான்
November 16, 2026, 4:10 pm
என்னை ஊக்குவித்தவர்களும் வாடிக்கையாளர்களும் எனது சொந்தம்; அவர்கள் மலேசியாவில் தான் அதிகம் உள்ளனர்: தனசேகரன்
November 16, 2026, 4:09 pm
அவதூறுகளுக்கு மத்தியில் தேசிய முன்னணியை நம்பி வாக்களித்த மலாக்கா மக்களுக்கு நன்றி: டத்தோஸ்ரீ தனேந்திரன்
November 16, 2026, 3:04 pm
பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரொன் இரு நாட்கள் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணமாக மலேசியா வருகை
November 16, 2026, 12:08 pm
ஆழமான குழியில் இருந்து காப்பாற்றுங்கள் என கேட்ட சத்தத்தை தொடர்ந்து முதியவர் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்
November 16, 2026, 12:07 pm
