செய்திகள் மலேசியா
பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரொன் இரு நாட்கள் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணமாக மலேசியா வருகை
கோலாலம்பூர்:
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரொன் இரு நாட்கள் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணமாக இன்று மலேசியா வந்தடைகிறார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அழைப்பின் பேரில் நடைபெறும் இச்சுற்றுப்பயணம், 2017ஆம் ஆண்டு மே மாதம் அவர் அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு மலேசியாவுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ வருகையாகும்.
அதிபர் மேக்ரானுடன் அவரது மனைவியும் பிரெஞ்சு நாட்டின் முதல் பெண்மணியான பிரிஜிட் மேக்ரொன், அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளைக் கொண்ட குழுவினரும் வருகை தருகின்றனர்.
இன்று கோலாலம்பூர் வந்தடையும் மேக்ரொன் தம்பதியினரை, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரும் அவரது மனைவியும் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலும் அதிகாரப்பூர்வமாக வரவேற்கின்றனர்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பில், இரு நாடுகளுக்கு இடையிலான நீண்டகால உறவை 'மூலோபாய கூட்டாண்மை நிலையளவிற்கு உயர்த்தும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும்.
வர்த்தகம், முதலீடு, முக்கிய தாதுக்கள், எரிசக்தி மாற்றம் , பாதுகாப்பு மற்றும் கல்வி ஆகிய முக்கிய துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பை பலப்படுத்த இந்த புதிய கட்டமைப்பு வழிவகுக்கும்.
உலகளாவிய ரீதியில் மலேசியாவின் 21-வது பெரிய வர்த்தக பங்காளியாகவும், ஐரோப்பிய நாடுகளில் 4-வது பெரிய பங்காளியாகவும் பிரான்ஸ் திகழ்கிறது.
1957-ஆம் ஆண்டுத் தொடங்கிய இரு நாடுகளின் தூதரக உறவை மேலும் வலுப்படுத்தவும், பொதுவான நலன்சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் இந்த அதிகாரப்பூர்வ பயணம் பெரிதும் உறுதுணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 16, 2026, 4:54 pm
பிரதமரிடம் திடீர் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு அறிவுறுத்தல்
November 16, 2026, 4:51 pm
பத்துமலையில் நூலகத் திறப்புடன் முப்பெரும் விழா; நவம்பர் 22ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறுகிறது: டான்ஸ்ரீ நடராஜா
November 16, 2026, 4:11 pm
தனியார் பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய மாணவன் கூச்சிங் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டான்
November 16, 2026, 4:10 pm
என்னை ஊக்குவித்தவர்களும் வாடிக்கையாளர்களும் எனது சொந்தம்; அவர்கள் மலேசியாவில் தான் அதிகம் உள்ளனர்: தனசேகரன்
November 16, 2026, 4:09 pm
அவதூறுகளுக்கு மத்தியில் தேசிய முன்னணியை நம்பி வாக்களித்த மலாக்கா மக்களுக்கு நன்றி: டத்தோஸ்ரீ தனேந்திரன்
November 16, 2026, 12:08 pm
ஆழமான குழியில் இருந்து காப்பாற்றுங்கள் என கேட்ட சத்தத்தை தொடர்ந்து முதியவர் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்
November 16, 2026, 12:07 pm
