நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அவதூறுகளுக்கு மத்தியில் தேசிய முன்னணியை நம்பி வாக்களித்த மலாக்கா மக்களுக்கு நன்றி: டத்தோஸ்ரீ தனேந்திரன்

கோலாலம்பூர்:

பல்வேறு அவதூறுகளுக்கு மத்தியில் தேசிய முன்னணியை நம்பி வாக்களித்த
மலாக்கா மக்களுக்கு நன்றி.

மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்எஸ் தனேந்திரன் இதனை கூறினார்.


மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில்  மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்து கொள்கிறேன்.

ஜொகூர் மாநிலத்தில் தொடங்கிய நீல அலை, தொடர்ந்து நெகிரி செம்பிலான் மாநிலத்திற்குப் பரவி, தற்போது மலாக்காவிலும் வலுப்பெற்றுள்ளது.

நாட்டின் அரசியல் நிலைத்தன்மை, பொருளாதார வளர்ச்சி, பல இன மக்களிடையே சமய, சமூக நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு தேசிய முன்னணியின் ஆட்சியே சிறந்தது என்பதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.

மேலும், தற்போதைய அரசாங்கம் மக்கள் நலன், பொருளாதாரம், கல்வி சார்ந்த கடமைகளில் போதிய கவனம் செலுத்தாமல், பிரிவினை அரசியலில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதன் காரணமாகவே தென் மலேசிய மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்களில் தேசிய முன்னணிக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.

மலாக்கா தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களைப் பெற்று தேசிய முன்னணி வெற்றி பெற்றிருப்பது, அக்கட்சியின் மீதான மக்களின் ஆதரவை வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

அடுத்ததாக நடைபெறவுள்ள சரவா, சிலாங்கூர் மாநிலத் தேர்தல்களிலும், எதிர்பார்க்கப்படும் 16ஆவது பொதுத் தேர்தலிலும் தேசிய முன்னணிக்கு மக்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டார்.

தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய முன்னணித் தலைவர்கள், குறிப்பாக மஇகா தலைவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், மலாக்கா மாநில வாக்காளர்களுக்கும் மக்கள் சக்தி கட்சி சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset