நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா, சிங்கப்பூர் எல்லை தாண்டிய புகைமூட்டத்திற்கு பிரபோவோ மன்னிப்பு கோரினார்

மனிலா:

காட்டுத் தீயைத் தொடர்ந்து ஏற்பட்ட எல்லை தாண்டிய புகைமூட்டச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மலேசியா, சிங்கப்பூரிடம் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ மன்னிப்பு கோரினார்.

நேற்று பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெற்ற 49ஆவது ஆசியான் உச்சி மாநாட்டின் முழு அமர்வில் அவர் உரையாற்றியபோது இந்த மன்னிப்பை கோரினார்.

இந்தோனேசிய அதிபர் செயலகத்தின் பத்திரிகை, ஊடகம், தகவல் பணியகம் வெளியிட்ட அறிக்கையின்படி,

காடு, நிலத் தீயைக் கையாள்வதற்குத் தனது கட்சியால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரபோவோ உறுதியளித்தார்.

இருப்பினும், கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக நீடித்த தீயானது, எல்லையைத் தாண்டி புகைமூட்டத்தை ஏற்படுத்தி, மலேசியா, சிங்கப்பூரில் உள்ள சமூகங்களைப் பாதித்தது.

இந்தோனேசிய அரசாங்கம், வன மற்றும் நிலத் தீவிபத்துகளில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது சகிப்புத்தன்மையற்ற கொள்கையைக் கடைப்பிடிப்பதுடன், சலுகைகளை ரத்து செய்தல், சட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட அமலாக்க நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset