நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தனியார் பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய மாணவன் கூச்சிங் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டான் 

கூச்சிங்: 

கடந்த அக்டோபர் 21ஆம் தேதி கூச்சிங்கில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கோடாரியால் ஆசிரியையைத் தாக்கியதாகக் கூறப்படும் 16 வயது மாணவன் மீது இன்று கூச்சிங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டன 

நீதிபதி லியோனா டொமினிக் மோஜிலியு  முன்னிலையில் சிறுவன் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவனிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் உடனடியாகப் பதிவு செய்யப்படவில்லை.

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி, மாணவனுக்கு மனநலப் பரிசோதனை மேற்கொள்வதற்காக அவனைச் செந்தோசா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

முதல் குற்றச்சாட்டின்படி, சட்டப்பூர்வ காரணமின்றித் தடைசெய்யப்பட்ட ஆயுதமான சிறிய கோடாரியைத் தன்வசம் வைத்திருந்ததாக அந்த மாணவன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது

இரண்டாவது குற்றச்சாட்டின்படி, சிறிய கருப்பு கோடாரியைப் பயன்படுத்தி 42 வயது பெண் ஆசிரியருக்குத் திட்டமிட்டுத் தீங்கிழைத்ததாகக் கூறப்படுகிறது.

குற்றவியல் சட்டம் பிரிவு 324-இன் கீழ், 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது இவற்றில் ஏதேனும் இரண்டும் தண்டனையாக வழங்கப்படலாம்.

மூன்றாவது குற்றச்சாட்டின்படி, உரிய அனுமதியின்றி பட்டாசுகள் மற்றும் வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட மாற்றப்பட்ட குளிர்பானக் கொள்கலன் போன்ற வெடிமருந்துகளை அவன் வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

1957-ஆம் ஆண்டு வெடிமருந்துச் சட்டம் பிரிவு 8-இன் கீழ் கொண்டுவரப்பட்ட இந்த வழக்கின் கீழ், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 10,000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி காலை சுமார் 7.50 மணியளவில் பள்ளி வளாகத்தில் இச்சம்பவம் அரங்கேறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஆசிரியை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும், இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 38 சாட்சிகளிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset