நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துமலையில் நூலகத் திறப்புடன் முப்பெரும் விழா; நவம்பர் 22ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறுகிறது: டான்ஸ்ரீ நடராஜா

பத்துமலை:

பத்துமலையில்  நூலகத் திறப்புடன் முப்பெரும் விழா மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா கூறினார்.

புதிய நூலகம் திறப்பு விழாவுடன் பல்வேறு கலை, இலக்கிய நிகழ்ச்சிகள் வரும் நவம்பர் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளன.

காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சி, பத்துமலைக் கோயில் வளாகத்திற்கு அருகிலுள்ள புதிய கட்டிடத்தில் நடைபெறுகிறது.

இவ்விழாவில் நூலகத் திறப்பு விழாவுடன், ‘கடாரம் கொண்டான்’ நூல் வெளியீடு, திருக்குறள் கணினிப் பெட்டகத் திறப்பு விழா என முப்பெரும் விழாவாக நடைபெறவுள்ளது.

தேவஸ்தான தலைவர் என்ற முறையில் நூலக திறப்பு விழா எனது தலைமையில் நடைபெறவுள்ளது.

அதே வேளையில் நூல் வெளியிட்டு விழாவிற்கு மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணனும் திருக்குறள் கணினிப் பெட்டகத் திறப்பு விழாவிற்கு அறங்காவலர் டத்தோ சிவக்குமாரும் தலைமையேற்கவுள்ளனர்.

மேலும், தமிழ் இலக்கிய உரைகள், பட்டிமன்றம், கவியரங்கம், பரதநாட்டியம், இசை நிகழ்ச்சிகள், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

தமிழ் மொழி, இலக்கியம், வாசிப்புப் பண்பாட்டை வளர்க்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விழாவில் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொள்ளுமாறு டான்ஸ்ரீ நடராஜா கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset