செய்திகள் மலேசியா
கிள்ளானில் சாலைப் பிரச்சினைகளுக்கு நீண்ட காலத் தீர்வு தேவை; வெள்ளத்தைத் தாங்கும் சாலைத் தொழில்நுட்பம் வேண்டும்: கணபதிராவ்
கோலாலம்பூர்:
கிள்ளானில் சாலைப் பிரச்சினைகளுக்கு நீண்ட காலத் தீர்வுடன் வெள்ளத்தைத் தாங்கும் சாலைத் தொழில்நுட்பம் வேண்டும்.
கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ் மக்களவையில் இதனை கூறினார்.
2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் பொதுப்பணித் துறை அமைச்சின் ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில், கிள்ளான் பகுதியில் தொடர்ந்து ஏற்படும் சாலை சேதங்கள், வெள்ளத்தைத் தாங்கும் சாலைத் தொழில்நுட்பம், உள்ளூர் வழிகாட்டி செயலியான TuJu ஆகிய மூன்று முக்கிய விவகாரங்களை அவர் இன்று கேள்வி எழுப்பினார்.
சாலைப் பராமரிப்புக்காக 2027ஆம் ஆண்டில் 135.965 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதில் சிலாங்கூர், குறிப்பாக கிள்ளான் பகுதிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், வெள்ளத்தால் அடிக்கடி சேதமடையும் சாலைகளைச் சீரமைப்பதுடன், மீண்டும் பாதிப்பு ஏற்படாத வகையில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும்.
கிள்ளானில் வெள்ளத்தைத் தாங்கும் சாலை அமைக்கும் முன்னோடித் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அதேவேளையில் Waze, Google Maps-க்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உள்ளூர் வழிகாட்டி செயலியான TuJu-வின் மேம்பாட்டுச் செலவு, தொழில்நுட்பக் கோளாறுகள், செயல்பாட்டுத் திறன் மற்றும் கூடுதல் நிதித் தேவைகள் குறித்தும் அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மக்களின் வரிப்பணம் தற்காலிகத் தீர்வுகளுக்காக அல்லாமல், நீண்டகாலப் பயனையும் தரமான சேவையையும் வழங்கும் திட்டங்களுக்காகச் செலவிடப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 16, 2026, 4:54 pm
பிரதமரிடம் திடீர் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு அறிவுறுத்தல்
November 16, 2026, 4:51 pm
பத்துமலையில் நூலகத் திறப்புடன் முப்பெரும் விழா; நவம்பர் 22ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறுகிறது: டான்ஸ்ரீ நடராஜா
November 16, 2026, 4:11 pm
தனியார் பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய மாணவன் கூச்சிங் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டான்
November 16, 2026, 4:10 pm
என்னை ஊக்குவித்தவர்களும் வாடிக்கையாளர்களும் எனது சொந்தம்; அவர்கள் மலேசியாவில் தான் அதிகம் உள்ளனர்: தனசேகரன்
November 16, 2026, 4:09 pm
அவதூறுகளுக்கு மத்தியில் தேசிய முன்னணியை நம்பி வாக்களித்த மலாக்கா மக்களுக்கு நன்றி: டத்தோஸ்ரீ தனேந்திரன்
November 16, 2026, 3:04 pm
பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரொன் இரு நாட்கள் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணமாக மலேசியா வருகை
November 16, 2026, 12:08 pm
ஆழமான குழியில் இருந்து காப்பாற்றுங்கள் என கேட்ட சத்தத்தை தொடர்ந்து முதியவர் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்
November 16, 2026, 12:07 pm
