நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

4 மாநிலங்களில் வெள்ளம்: 23 நிவாரண மையங்களில் 2,572 பேர் தங்கியுள்ளனர்

கோலாலம்பூர்:

நான்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 777 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 2,572 பாதிக்கப்பட்டவர்கள் 23 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் இன்னும் தங்கியுள்ளனர்.

சமூக நலத்துறை பேரிடர் தகவல் இணையதளத்தின்படி,

பாதிக்கப்பட்ட மாநிலங்கள் சிலாங்கூர், பேரா, பினாங்கு, சரவா ஆகும்.

பாதிக்கப்பட்டவர்களில் 267 மூத்த குடிமக்கள் உட்பட 1,642 வயது வந்த ஆண்களும் பெண்களும், மேலும் 898 குழந்தைகளும் 77 பச்சிளங் குழந்தைகளும் அடங்குவர்.

சிலாங்கூர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகப் பதிவாகியுள்ளது.

குறிப்பாக கோல சிலாங்கூரில் உள்ள ஏழு தற்காலிக வெளியேற்ற முகாம்களில் 369 குடும்பங்களைச் சேர்ந்த 1,395 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பேரா மாநிலத்தில், லாரூட், மாத்தாங், செலாமா, ஹிலிர் பேரா ஆகிய பகுதிகளில் உள்ள 14 தற்காலிகப் பாதுகாப்பு முகாம்களில் 1,076 பாதிக்கப்பட்டவர்கள்  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பினாங்கில், தெற்கு செபெராங் பெராய் (சுங்கை பாகாப்) பகுதியில் உள்ள ஒரு தற்காலிகப் பாதுகாப்பு முகாமில் மொத்தம் 94 பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், சரவாக்கில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் மட்டுமே இன்னும் பாதிக்கப்பட்டு, மிரி மாவட்டத்தில் உள்ள ஒரு தற்காலிகப் பாதுகாப்பு முகாமில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset