நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சரவாக் மாநிலத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பாஸ் கட்சி இன்னும் பரிசீலித்து வருகிறது 

கோலாலம்பூர்:

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சரவாக் மாநிலத் தேர்தலில் PAS போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து இன்னும் பரிசீலித்து வருவதாக அக்கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான் தெரிவித்துள்ளார்.

சபா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் மாதம் பேசிய PAS, சமாரியாங் (Samariang), மற்றும் பெத்திங் மாரோ (Beting Maro) உள்ளிட்ட முஸ்லிம்-பூமிபுத்ரா பெரும்பான்மை கொண்ட நான்கு தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து பரிசீலித்து வருவதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சரவாக் தேர்தலில் PAS கட்சி பெத்திங் மாரோ தொகுதியில் போட்டியிட்டது, இருப்பினும் ஜிபிஎஸ் (GPS) கட்சியிடம் தோல்வியைத் தழுவியது.

கடந்த 2001ஆம் ஆண்டு PAS கட்சி முதன்முதலில் இம்மாநில அரசியலில் காலடி எடுத்துவைத்தபோது, பெத்திங் மாரோவுடன் சமாரியாங் தொகுதியும் அது போட்டியிட்ட முதல் சில தொகுதிகளில் ஒன்றாகும்.

காலப்போக்கில் தனது செல்வாக்கை விரிவுபடுத்த முயன்ற அக்கட்சி, 2016 மாநிலத் தேர்தலில் 11 வேட்பாளர்களைக் களமிறக்கியது. இருப்பினும், எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறத் தவறியது.

குறிப்பிடத்தக்க வகையில், சரவாக் மாநில வாக்காளர்கள் எதிர்வரும் டிசம்பர் 12ஆம் தேதியன்று வாக்களிக்க உள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset