நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மூன்று வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்து; இருவர் பலி 

கோத்தா திங்கி: 

மூன்று வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தில் இருவர் பலியான வேளையில் மேலும் இருவர் படுகாயமடைந்தனர் 

இந்த சாலை விபத்து செனாய் - டெசாரு நெடுஞ்சாலையின் KM 52.5இல் அதிகாலையில் நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது 

சாலை விபத்து குறித்து தங்கள் தரப்புக்கு அவசர அழைப்பு கிடைத்ததாக பண்டார் பெனாவார்  தீயணைப்பு, மீட்பு படையின் மூத்த அதிகாரி முஹம்மத் ஹஸ்மி சுல்கப்ளி கூறினார்.

PROTON X70, PROTON PERSONA, TOYOTA UNSER ஆகிய வாகனங்கள் விபத்தில் சிக்கியது. 

இதில் பெர்சோனா, எக்ஸ் 70 கார்களில் இருந்த பாதிக்கப்பட்ட இருவர் நிகழ்விடத்திலேயே பலியானதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர் 

பாதிக்கப்பட்ட மேலும் இருவர் ஜொகூர் பாரு சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்

அடுத்த கட்ட நடவடிக்கைக்காக உயிரிழந்த இருவரின் உடல்கள் போலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset