செய்திகள் மலேசியா
காடேக்கில் நடராஜா உட்பட தேசிய முன்னணி வேட்பாளர்களை பாஸ் வாக்காளர்கள் ஆதரிக்க வேண்டும்: துவான் இப்ராஹிம்
காடேக்:
காடேக்கில் நடராஜா உட்பட மலாக்காவில் தேசிய முன்னணி வேட்பாளர்களை
பாஸ் வாக்காளர்கள் முழுமையாக ஆதரிக்க வேண்டும்.
பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் இதனை வலியுறுத்தினார்.
மலாக்கா மாநிலத் தேர்தலை தேசிய முன்னணியும் தேசியக் கூட்டணியும் இணைந்து தான் எதிர்கொள்கிறது.
அதன் அடிப்படையில் தேசிய முன்னணி வேட்பாளர்களும் நமது வேட்பாளர்கள் தான். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
மேலும் தேசிய முன்னணி வேட்பாளர்களை நாம் ஆதரிக்க வேண்டும் என பாஸ் கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ ஹாடி அவாங் அறிவித்துள்ளார்.
ஆக பாஸ் கட்சியின் வாக்காளர்கள் எந்தவொரு குழப்பமும் இல்லாமல் தேசிய முன்னணி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும்.
அது காடேக்கில் போட்டியிடும் நடராஜா செல்லப்பாவாக இருந்தாலும் பாஸ் வாக்காளர்கள் ஆதரிக்க வேண்டும்.
இதுவே பாஸ் தலைமைத்துவத்தின் முடிவு என்று நடராஜாவை ஆதரித்து பிரச்சாரம் செய்த துவான் இப்ராஹிம் கூறினார்.
தேசிய முன்னணி, தேசியக் கூட்டணி இடையிலான ஒத்துழைப்பு நீண்ட இலக்கை கொண்டதாகும்.
ஆக இந்த ஒத்துழைப்பின் பிரமாண்ட ஒத்துழைப்பை மலாக்காவில் தொடங்குவோம் என்று துவான் இப்ராஹிம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 13, 2026, 11:24 pm
இந்தியர்களுக்கு பாஸ் கட்சி அச்சுறுத்தல் அல்ல; காடேக்கில் நடராஜாவின் வெற்றியை உறுதி செய்வோம்: டத்தோஸ்ரீ சரவணன்
November 13, 2026, 7:18 pm
வெள்ளிக்கிழமை தொழுகைக்காக நஜிப் காஜாங் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்
November 13, 2026, 4:38 pm
பரபரப்பான அரசியல் நடுவே கூடுகிறது அமைச்சரவை கூட்டம்: பிரதமர் அன்வார் தகவல்
November 13, 2026, 4:37 pm
16ஆவது மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தல்: அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்கப்போவது யார் ?
November 13, 2026, 3:50 pm
7 மாணவிகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகளை ஓய்வு பெற்ற ஆசிரியர் மறுத்து விசாரணை கோரினார்
November 13, 2026, 3:49 pm
