நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெள்ளிக்கிழமை தொழுகைக்காக நஜிப் காஜாங் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக், இன்று காஜாங் சிறையில் வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவேற்றுவதற்காக சிறைத்துறை அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார்.

இன்று ஊடகங்கள் தொடர்பு கொண்டபோது, ​​மலேசிய சிறைத்துறை இதை உறுதிப்படுத்தியது.

கடந்த செவ்வாய்க்கிழமை, இங்குள்ள தாமான் டூத்தா, ஜாலான் லங்காக் டூட்டாவில் உள்ள தனது இல்லத்தில் வீட்டுக் காவலைத் தொடங்கிய பிறகு, நஜிப்பின் முதல் வெள்ளிக்கிழமை தொழுகை இன்று நடைபெறுகிறது.

முன்னதாக, காலை சுமார் 10.30 மணியளவில் ஜாலான் லங்காக் டூத்தாவில் உள்ள அவரது இல்லத்திலிருந்து நஜிப் பயணித்த வாகனம் புறப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

மலேசிய சிறைத்துறை, போலிசாரின் வாகனத்துடன் புரோட்டான் எக்ஸ்70 வாகனத்தில் நஜிப் பயணித்தார்.

நேற்று, நஜிப்பின் மகன் டத்தோ முகமது நஜிபுடின், சிறைச்சாலையால் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளின்படி தனது தந்தை காஜாங் சிறையில் வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவேற்றுவார் என்று அறிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset