நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

16ஆவது மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தல்: அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்கப்போவது யார் ? 

மலாக்கா: 

16ஆவது மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தல் நாளை நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

வாக்குப்பதிவு பணிகளில் 11,103 பேர் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்றும் 240 வாக்களிப்பு மையங்கள் திறக்கப்படும் என்று மலேசியத் தேர்தல் ஆணையம் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது 

16ஆவது மலாக்கா மாநில தேர்தலில் 675,166 பேர் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றவுள்ளனர் 

மலாக்கா மாநில தேர்தலில் தேசிய முன்னணி, தேசிய கூட்டணி, நம்பிக்கை கூட்டணி, புத்ரா, ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. 

நாளை காலை 8 மணி தொடங்கி மாலை 6 மணி வரை மக்கள் தங்களின் வாக்குகளைச் செலுத்தவுள்ளனர். சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இரவு மணி 10க்குத் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கடந்த 2021 மலாக்கா தேர்தலில் தேசிய முன்னணி 28 இடங்களில் 21 இடங்களை வெற்றிக் கொண்டு மாநில அரசாங்கத்தை அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset