நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பரபரப்பான அரசியல் நடுவே கூடுகிறது அமைச்சரவை கூட்டம்: பிரதமர் அன்வார் தகவல்

கோலாலம்பூர்: 

நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள போதிலும், இன்றைய அமைச்சரவைக் கூட்டம் எத்தகைய தடுமாற்றமும் இன்றி வழக்கமான முறையில் சுமூகமாக நடைபெற்றதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலங்களில் அரசியல் வெப்பம் ஏறுவதும் இறங்குவதும் இயல்பான ஒன்றுதான் என்றும், ஆனால் அதற்காக நாட்டின் நலன்களையும் மக்களின் தேவைகளையும் அமைச்சரவை ஒருபோதும் புறக்கணிக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இன்று ஜும்மா தொழுகையை நிறைவேற்றுவதற்காகப் பிரிக்பீல்ட்ஸ், மதராசத்துல் கௌத்தியா சூராவ்விற்கு வருகை தந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும், இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் இரு துணைப் பிரதமர்களான டத்தோஸ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி, டத்தோஶ்ரீ ஃபாடில்லா யூசோப், இதர அமைச்சர்களும் கலந்துகொண்டதாக பிரதமர் கூறினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset