செய்திகள் மலேசியா
இந்தியர்களுக்கு பாஸ் கட்சி அச்சுறுத்தல் அல்ல; காடேக்கில் நடராஜாவின் வெற்றியை உறுதி செய்வோம்: டத்தோஸ்ரீ சரவணன்
காடேக்:
நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு பாஸ் ஒருபோதும் அச்சுறுத்தலான கட்சி அல்ல என்று மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.
மலாக்கா காடேக் சட்டமன்றத் தொகுதியில் தேசியக் கூட்டணி சார்பில் நடராஜா செல்லப்பா போட்டியிடுகிறார்.
கடந்த 2 வார பிரச்சாரத்தின் உச்சக்கட்டமான தேசியக் கூட்டணி தலைவர்களுடன் இணைந்து இறுதி பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் உட்பட தேசியக் கூட்டணி தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
நமக்கு எதிராக உள்ளவர்கள் இனவாதத்தை தூண்டும் அளவிற்கு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
குறிப்பாக பாஸ் கட்சியை இந்தியர்களுக்கு அச்சுறுத்தலான கட்சி என சித்தரித்து பேசு வருகின்றர்.
அரசியலில் பேசுவதற்கு ஒன்றும் இல்லாதவர்கள் தான் பாஸ் கட்சிக்கு எதிராக பேசுவார்கள்.
ஆனால் பாஸ் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை கொடுத்தாலும் மற்ற மதத்தினருக்கு எதிரான கட்சி அல்ல.
இது எனக்கு தெளிவாக தெரியும்.
காரணம் நான் அவர்களுடன் ஒரே அமைச்சரவையில் வேலை செய்துள்ளேன்.
ஆக பாஸ் கட்சிக்கு எதிரான பிரச்சாரங்களை இந்தியர்கள் நம்ப வேண்டாம் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
காடேக் சட்டமன்றத் தொகுதியில் சிறந்த வேட்பாளராக நடராஜா செல்லப்பா விளங்குகிறார். அவரை மக்கள் வெற்றி பெற வைக்க வேண்டும்.
காரணம் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய பிரதிநிதியாக ஆட்சிக் குழுவில் இடம் பெறுவார்.
ஆக மக்கள் சிந்தித்து வாக்களக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 13, 2026, 11:43 pm
காடேக்கில் நடராஜா உட்பட தேசிய முன்னணி வேட்பாளர்களை பாஸ் வாக்காளர்கள் ஆதரிக்க வேண்டும்: துவான் இப்ராஹிம்
November 13, 2026, 7:18 pm
வெள்ளிக்கிழமை தொழுகைக்காக நஜிப் காஜாங் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்
November 13, 2026, 4:38 pm
பரபரப்பான அரசியல் நடுவே கூடுகிறது அமைச்சரவை கூட்டம்: பிரதமர் அன்வார் தகவல்
November 13, 2026, 4:37 pm
16ஆவது மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தல்: அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்கப்போவது யார் ?
November 13, 2026, 3:50 pm
7 மாணவிகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகளை ஓய்வு பெற்ற ஆசிரியர் மறுத்து விசாரணை கோரினார்
November 13, 2026, 3:49 pm
