நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பிரச்சாரங்களும் தேசிய முன்னணிக்கு சாதகமாகவே அமையும்: டத்தோஸ்ரீ தனேந்திரன்

அலோர்காஜா:

டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பிரச்சாரங்களும் தேசிய முன்னணிக்கு சாதகமாகவே அமையும்.

மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்எஸ் தனேந்திரன் இதனை கூறினார்.

மலாக்கா மாநிலத் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்கான பிரச்சாரங்கள் இன்று இரவுடன் முடிவடையவுள்ளது.

ஆக மலாக்கா மாநில மக்கள் நாளை காலையிலேயே வாக்கு மையங்களுக்கு சென்று தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்.

குறிப்பாக தேசிய முன்னணி - தேசியக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

இதுவே மலேசிய மக்கள் சக்தி கட்சியின் கோரிக்கையாக உள்ளது.

அதே வேளையில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு வீட்டுக் காவல் வழங்கப்பட்டுள்ளது.

ஆக இந்த தேர்தலில் நஜிப்பிற்கு வழங்கப்பட்ட மன்னிப்பையும் பிரச்சார பொருளாக பயன்படுத்தியுள்ளனர்.

எது எப்படி மக்கள் தற்போது தெளிவாக உள்ளனர். அவர்களை யாரும் ஏமாற்ற முடியாது.

டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பிரச்சாரங்களும் தேசிய முன்னணிக்கு சாதகமாகவே அமையும்.

ஆகவே நாளைய மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணியின் வெற்றியை உறுதி செய்வோம் என்று அவர் கூறினார்.

மலாக்கா மாநில மக்கள் சக்தி கட்சியின் தீபாவளி விருந்துபசரிப்பு நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற டத்தோஸ்ரீ தனேந்திரன் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்


தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset