செய்திகள் மலேசியா
7 மாணவிகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகளை ஓய்வு பெற்ற ஆசிரியர் மறுத்து விசாரணை கோரினார்
தெலுக் இந்தான்:
பேரா மாநிலம், லங்காப் பகுதியில் உள்ள ஒரு இடைநிலைப் பள்ளியில் பயின்ற ஏழு மாணவிகளுக்குப் பாலியல் ரீதியான உடல் ரீதித் தொல்லைகள் அளித்ததாகச் சுமத்தப்பட்ட 17 குற்றச்சாட்டுகளையும் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் மறுத்து, விசாரணை கோரியுள்ளார்.
56 வயதுடைய ஜைடி அப்பாஸ் Zaidi என்ற அந்த ஓய்வுபெற்ற ஆசிரியர், இன்று தெலுக் இந்தான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி ரஃபிடா ஹஜிஸ் முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது, தாம் குற்றமற்றவர் எனத் தெரிவித்தார்.
மலாய் மொழி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், 2024ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை 13 முதல் 15 வயதுக்குட்பட்ட ஏழு மாணவிகளிடம் பாலியல் நோக்கத்துடன் உடல் ரீதியான அத்துமீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
ஆசிரியர் என்ற முறையில் மாணவிகளுடன் நம்பிக்கைக்குரிய உறவைக் கொண்டிருந்த நிலையில், தெலுக் இந்தானுக்குத் திரும்பும் வழியில் காருக்குள்ளும், சம்பந்தப்பட்ட பள்ளியின் சிற்றுண்டிச்சாலை, தனி அறையிலும் இச்சம்பவங்கள் நிகழ்ந்ததாகக் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 (சட்டம் 792), பிரிவு 14(ஏ)-இன் கீழ் அவர் மீது 17 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் பிரம்படியும் விதிக்கப்படலாம்.
இந்நிலையில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஒருவரின் உத்தரவாதத்துடன் மொத்தம் 40,000 ரிங்கிட் பிணை வழங்க உத்தரவிட்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட மாணவிகள், சாட்சிகளைத் தொந்தரவு செய்யக்கூடாது, மாதந்தோறும் அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்ற அரசுத் தரப்பு கோரிய கூடுதல் நிபந்தனைகளையும் நீதிமன்றம் விதித்தது.
இந்த வழக்கில் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கான மறுவிசாரணை தேதி வரும் டிசம்பர் 14ஆம் தேதிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 13, 2026, 4:38 pm
பரபரப்பான அரசியல் நடுவே கூடுகிறது அமைச்சரவை கூட்டம்: பிரதமர் அன்வார் தகவல்
November 13, 2026, 4:37 pm
16ஆவது மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தல்: அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்கப்போவது யார் ?
November 13, 2026, 3:49 pm
அநீதி என்றால் அது அநீதிதான்; ஹாடி அவாங் தனது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும்: பிரகாஷ்
November 13, 2026, 3:16 pm
இரண்டு மாபெரும் நிகழ்வுகளுடன் மீண்டும் வந்துவிட்டது அப்சலூட் பசார் காயா ராயா விழா 2027
November 13, 2026, 3:15 pm
மலாக்கா மாநிலத் தேர்தல்: தேசிய முன்னணி - தேசியக் கூட்டணி 24 தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்தும்
November 13, 2026, 3:13 pm
அந்தோனி லோக்கின் ராஜினாமா குறித்து முடிவெடுக்க அவசரப்படத் தேவையில்லை: பிரதமர்
November 13, 2026, 2:39 pm
ஹாடி அவாங் தனது கருத்தைத் திரும்பப் பெறுவதுடன் மன்னிப்புக் கோர வேண்டும்: சிவமலர் வலியுறுத்தல்
November 13, 2026, 12:16 pm
செம்பனை எண்ணெய் கலப்படம் தொடர்பான குற்றச்சாட்டு: விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க PKFZ தயார்
November 13, 2026, 11:27 am
