நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாப்பாவை ஒளியூட்டும் திட்டத்தின் முதல் கட்டமாக 20 சூரிய சக்தியில் இயங்கும் எல்இடி தெருவிளக்குகள் நிறுவப்பட்டன

தாப்பா:

இரவில் சாலைப் பாதுகாப்பையும், பார்வைத் தெளிவையும் மேம்படுத்துவதற்காக, ஜாலான் சங்காட் பெதாய், தாப்பா சிறைச்சாலைக்கு இடையேயான 4 கி.மீ. நீளமுள்ள பகுதியில் இருபது சூரிய சக்தியில் இயங்கும் எல்இடி தெருவிளக்குகள் நிறுவப்பட்டுள்ளன.

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம். சரவணனால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட தாப்பாவை அழகுபடுத்தல், ஒளியூட்டல் திட்டத்தின் முதல் கட்டமாக இது  அமைந்துள்ளது.

முன்னர் இப்பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாததால், இரவில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இப்பகுதிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

தாப்பாவை, பாதுகாப்பான மற்றும் நவீன உள்கட்டமைப்புடன் கூடிய சுற்றுச்சூழலுக்கு உகந்த ஸ்மார்ட் கிராமப்புற மாவட்டமாக மாற்றுவதற்கான தனது திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் இருப்பதாக டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில், தொகுதி முழுவதும் மொத்தம் 200 சூரிய சக்தி தெரு விளக்குகள் கட்டம் கட்டமாக நிறுவப்படும்.

சூரிய சக்தியில் இயங்கும் இந்த விளக்குகள், பிரதான மின்சாரக் கட்டமைப்பைச் சாராமல் இயங்குவதால், மின்சாரச் செலவுகள் குறைவதோடு, கார்பன் தடமும் குறைகிறது.

மின்சாரக் கட்டமைப்புடன் தொடர்பில்லாத அவற்றின் திறன், மின் தடைகளின் போதும் தொடர்ந்து வெளிச்சம் வழங்க உதவுகிறது.

இதன்மூலம், வாகன ஓட்டிகள், பிற சாலைப் பயனாளர்களுக்குப் பார்வைத் தெளிவு மேம்படுகிறது என்று அவர்  வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset