செய்திகள் மலேசியா
அநீதி என்றால் அது அநீதிதான்; ஹாடி அவாங் தனது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும்: பிரகாஷ்
ஷாஆலம்:
மலாக்காவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறிய கருத்துகள் கண்டனத்துக்குரியது.
இத்தகைய கருத்து முஸ்லிம் அல்லாத மக்களை அவமதிப்பதுடன், ஒவ்வொரு தலைவரிடமும் எதிர்பார்க்கப்படும் நேர்மை, பொறுப்புணர்வு, மக்கள் நலன் சார்ந்த கடமைகளையும் குறைத்து மதிப்பிடுகிறது.
கோத்தா கமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சண்புநாதன் இதனை கூறினார்.
ஹாடி அவர்களிடம் நான் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன்.
ஒரு தலைவர் மக்களின் பணத்தைத் தவறாகப் பயன்படுத்தினால், அவர் முஸ்லிம் என்பதால் அவரது தவறு அல்லது அநீதி குறைந்துவிடுமா?
அதேவேளையில் முஸ்லிம் அல்லாத ஒரு தலைவர் நேர்மையுடன் மக்களுக்குச் சேவையாற்றி, அவர்களின் நலனுக்காகப் பாடுபட்டால், எந்த அடிப்படையில் அவரை அநீதியானவர் என்று முத்திரை குத்துகிறீர்கள்?
ஊடகங்களின் செய்தி அறிக்கையின்படி, ஹாடி அவர்கள் குறிப்பிட்டுள்ள “கொடுமை” என்பதற்கான வரலாற்றுப் பின்னணி இன்னும் தெளிவாகவில்லை.
அதை அவர் தெளிவுபடுத்த வேண்டும். தேர்தல் பிரச்சார மேடையில் முஸ்லிம் அல்லாத மக்களை ஒட்டுமொத்தமாக ஏன் குறிவைக்க வேண்டும்?
மலாக்கா மக்கள் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த விரும்பும் வேட்பாளர்களிடம், பொதுப் பணம் எவ்வாறு நிர்வகிக்கப்படும், வெள்ளப் பிரச்சினைகள் எவ்வாறு கையாளப்படும், அனைத்து மக்களின் நலன்களும் எவ்வாறு பாதுகாக்கப்படும் என்பதையே எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால், யார் நீதியுடன் ஆட்சி செய்ய முடியும் என்பதை மதத்தின் அடிப்படையில் மதிப்பிடும் கருத்தை ஹாடி முன்வைத்துள்ளார்.
ஒரு தலைவர் மக்கள் நம்பிக்கைக்குத் துரோகம் செய்தாலோ, ஊழலில் ஈடுபட்டாலோ, அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும்.
மக்கள் வாக்களிப்பதற்கு முன்பாக, இந்த விவகாரத்தில் உங்களது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும்.
அதற்கான பதிலை அறிந்துகொள்ள மக்களுக்கு முழு உரிமை உள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 13, 2026, 4:38 pm
பரபரப்பான அரசியல் நடுவே கூடுகிறது அமைச்சரவை கூட்டம்: பிரதமர் அன்வார் தகவல்
November 13, 2026, 4:37 pm
16ஆவது மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தல்: அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்கப்போவது யார் ?
November 13, 2026, 3:50 pm
7 மாணவிகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகளை ஓய்வு பெற்ற ஆசிரியர் மறுத்து விசாரணை கோரினார்
November 13, 2026, 3:16 pm
இரண்டு மாபெரும் நிகழ்வுகளுடன் மீண்டும் வந்துவிட்டது அப்சலூட் பசார் காயா ராயா விழா 2027
November 13, 2026, 3:15 pm
மலாக்கா மாநிலத் தேர்தல்: தேசிய முன்னணி - தேசியக் கூட்டணி 24 தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்தும்
November 13, 2026, 3:13 pm
அந்தோனி லோக்கின் ராஜினாமா குறித்து முடிவெடுக்க அவசரப்படத் தேவையில்லை: பிரதமர்
November 13, 2026, 2:39 pm
ஹாடி அவாங் தனது கருத்தைத் திரும்பப் பெறுவதுடன் மன்னிப்புக் கோர வேண்டும்: சிவமலர் வலியுறுத்தல்
November 13, 2026, 12:16 pm
செம்பனை எண்ணெய் கலப்படம் தொடர்பான குற்றச்சாட்டு: விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க PKFZ தயார்
November 13, 2026, 11:27 am
