நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்கா மாநிலத் தேர்தல்: தேசிய முன்னணி - தேசியக் கூட்டணி 24 தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்தும்

அலோர்காஜா:

நாளை நடைபெறவிருக்கும் மலாக்கா மாநிலத் தேர்தலில் 28 சட்டமன்றத் தொகுதிகளில் 24 இடங்களில் தேசிய முன்னணி - தேசியக் கூட்டணி கூட்டணிகள் முன்னிலை வகிக்கின்றன.

தேர்தலுக்கு முன்னதாக கணிப்புகளின் அடிப்படையில் இல்ஹாம் ஆய்வு மையம் இதனை வெளியிட்டுள்ளது.

கோத்தா லக்சமணா,  பண்டார் ஹிலிர் ஆகிய தனது இரண்டு பாரம்பரியத் தொகுதிகளில் நம்பிக்கை கூட்டணி வலுவான நிலையில் உள்ளது.

அதேசமயம், முன்னர் கூட்டணி வசம் இருந்த ஆயர் குரோ, கெசிடாங் தொகுதிகளில் கடும் போட்டி நிலவுவதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கணிப்புகள் ஒரு கள ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில் அமைந்திருப்பதாகவும், அந்த ஆய்வு தேசிய முன்னணி - தேசியக் கூட்டணியின் ஒத்துழைப்பு, குறிப்பாக மலாய் வாக்காளர்களின் ஆதரவைத் திரட்டுவதில் வலுப்பெற்று வருவதைக் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset