நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இரண்டு மாபெரும் நிகழ்வுகளுடன் மீண்டும் வந்துவிட்டது அப்சலூட் பசார் காயா ராயா விழா 2027

கோலாலம்பூர்:

இரண்டு மாபெரும் நிகழ்வுகளுடன் மீண்டும் வந்துவிட்டது அப்சலூட் பசார் காயா ராயா விழா 2027.

அப்சலூட் பசார் எக்ஸ் ஃபெஸ்டிவல் காயா ராயா 2027 பதிப்பிற்காக சுமார் 35 மில்லியன் ரிங்கிட் பரிவர்த்தனை மதிப்பை இலக்காகக் கொண்டுள்ளது.

இது, முன்பு பதிவுசெய்யப்பட்ட சுமார் 25 மில்லியன் ரிங்கிட் ஒப்பிடும்போது 10 மில்லியன் ரிங்கிட் அதிகமாகும்.

இந்த நிகழ்வு கிழக்குக் கடற்கரைக்கு விரிவுபடுத்தப்படுவதாலும், உள்ளூர் தொழில்முனைவோருக்கு பரந்த சந்தை வாய்ப்புகளைத் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்  Tapestry by ABGR: Singgah Raya என்ற புதிய மாதிரி அறிமுகப்படுத்தப்படுவதாலும் இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ABFGR, Tapestry by ABGR: Singgah Raya, ஆகியவற்றின் இணை ஏற்பாட்டாளரான டத்தின் வீரா சப்ரினா அப்துல்லா இதனை கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் பதிவுசெய்யப்பட்ட விற்பனை வளர்ச்சியின் அடிப்படையில் இந்த இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், நாங்கள் சராசரியாக 20 முதல் 25 சதவீதம் வரை விற்பனை வளர்ச்சியைக் காண்கிறோம்,

இந்த வேகம் அடுத்த ஆண்டும் தொடரும் என்று நம்புகிறோம் என்று அவர் நேற்று இங்கு நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

ABFGR 2027  விழா கோலாலம்பூர்  மைடேக்கில் அடுத்தாண்டு பிப்ரவரி 19 முதல் 22 வரை, 66 மணிநேரம் இடைவிடாமல் நடைபெறும்.

முதல் முறையாக, இந்த நிகழ்வு கிழக்குக் கடற்கரைக்கும் விரிவடைந்துள்ளது.

குவாந்தானில் உள்ள சுல்தான் ஹாஜி அஹ்மத் ஷா அரங்கில் அடுத்தாண்டு மார்ச் 5 முதல் 7 வரை இது நடைபெறும்.

இவ்விரு இடங்களிலும் 900க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த நிகழ்வில் பிரபலங்கள், செல்வாக்கு மிக்கவர்களுடனான கலந்துரையாடல் அமர்வுகள், மினி அப்சலூட் உணவுத் திருவிழா, இசை நிகழ்ச்சிகள், மகிழ்ச்சி நேர விற்பனை, அதிர்ஷ்டக் குலுக்கல்கள், அதிர்ஷ்டச் சக்கரம் மற்றும் பண அறை உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளும் இடம்பெறுகின்றன.

இதே நிகழ்வாக, ABGR நிறுவனம் 'டேப்ஸ்ட்ரி பை ABGR: சிங்கா ராயா' என்ற புதிய நிகழ்வு மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது கோலாலம்பூரில் உள்ள தி ஆர்ச் கேலரிஸில் அடுத்தாண்டு பிப்ரவரி 26 முதல் 28 வரை நடைபெறும்.

டேப்ஸ்ட்ரியானது ABFGR-இலிருந்து மாறுபட்ட ஒரு கருத்தையும் அனுபவத்தையும் கொண்டு வரும்.

மேலும் சிறப்பு வாய்ந்த அணுகுமுறையைக் கொண்ட பிராண்டுகள் புதிய வாடிக்கையாளர்களுக்கு சென்றடைவதற்கும் ஒரு தளத்தை வழங்கும் என்று இணை நிறுவனர் நதியா ஷஹாப் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset