செய்திகள் மலேசியா
சிலாங்கூர் உட்பட பல மாநிலங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
கோலாலம்பூர்:
சிலாங்கூர் மாநிலத்தின் ஐந்து மாவட்டங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் இன்று நண்பகல் 12 மணி வரை இடிமின்னல், பலத்த மழை மற்றும் தீவிர காற்று வீசக்கூடும் என மெட் மலேசியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
வானிலை நிலவரம் குறித்து வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, சிலாங்கூரில் சபாக் பெர்னம் (Sabak Bernam), கோலா சிலாங்கூர் (Kuala Selangor), கோலா லங்காட் (Kuala Langat), சிப்பாங் (Sepang) மற்றும் கிள்ளான் (Klang) ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெர்லிஸ் (Perlis), கெடா (Pendang, Padang Terap, Kota Setar, Pokok Sena, Langkawi, Kubang Pasu, Yan), பேராக் (Bagan Datuk, Manjung), கிளாந்தான் (Tumpat, Pasir Puteh, Bachok, Kota Bharu, Pasir Mas, Jeli, Tanah Merah, Machang) மற்றும் பகாங் (Pulau Tioman) உள்ளிட்ட மாநிலங்களிலும் இதே போன்ற சீரற்ற வானிலை நிலவக்கூடும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
மணி நேரத்திற்கு 20 மில்லி மீட்டருக்கும் அதிகமான கனமழையைத் தரக்கூடிய இடிமின்னல் அறிகுறிகள் தென்படுவதால் அல்லது அது ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தொடரக்கூடும் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த இடிமின்னல் எச்சரிக்கையானது குறுகிய கால எச்சரிக்கையாகும் என்றும், வெளியிடப்படும் ஒவ்வொரு அறிவிப்பும் அதிகபட்சம் ஆறு மணி நேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் விளக்கமளித்துள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 13, 2026, 4:38 pm
பரபரப்பான அரசியல் நடுவே கூடுகிறது அமைச்சரவை கூட்டம்: பிரதமர் அன்வார் தகவல்
November 13, 2026, 4:37 pm
16ஆவது மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தல்: அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்கப்போவது யார் ?
November 13, 2026, 3:50 pm
7 மாணவிகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகளை ஓய்வு பெற்ற ஆசிரியர் மறுத்து விசாரணை கோரினார்
November 13, 2026, 3:49 pm
அநீதி என்றால் அது அநீதிதான்; ஹாடி அவாங் தனது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும்: பிரகாஷ்
November 13, 2026, 3:16 pm
இரண்டு மாபெரும் நிகழ்வுகளுடன் மீண்டும் வந்துவிட்டது அப்சலூட் பசார் காயா ராயா விழா 2027
November 13, 2026, 3:15 pm
மலாக்கா மாநிலத் தேர்தல்: தேசிய முன்னணி - தேசியக் கூட்டணி 24 தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்தும்
November 13, 2026, 3:13 pm
அந்தோனி லோக்கின் ராஜினாமா குறித்து முடிவெடுக்க அவசரப்படத் தேவையில்லை: பிரதமர்
November 13, 2026, 2:39 pm
ஹாடி அவாங் தனது கருத்தைத் திரும்பப் பெறுவதுடன் மன்னிப்புக் கோர வேண்டும்: சிவமலர் வலியுறுத்தல்
November 13, 2026, 12:16 pm
