செய்திகள் மலேசியா
ஹாடி அவாங் தனது கருத்தைத் திரும்பப் பெறுவதுடன் மன்னிப்புக் கோர வேண்டும்: சிவமலர் வலியுறுத்தல்
கோலாலம்பூர்:
பாஸ் கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிக் கூட்டத்தில் தெரிவித்ததாக வெளியான கருத்துக்கு கெஅடிலான் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் சிவமலர் கணபதி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களையும் முஸ்லிம் அல்லாதவர்களையும் குறித்த ஹாடி அவாங் தெரிவித்த கருத்து, மிகவும் கண்டிக்கத்தக்கது.
குறிப்பாக மக்களிடையே பிளவை ஏற்படுத்தக்கூடியதுமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஒருவரின் நன்மை, தீமையை அவர் சார்ந்த மதத்தின் அடிப்படையில் மதிப்பிடக்கூடாது.
மாறாக, அவர்களின் செயல்களின் அடிப்படையிலேயே மதிப்பிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
குறிப்பாக, மலாக்கா மாநிலத் தேர்தலுக்கு இன்னும் 24 மணி நேரத்திற்கும் குறைவான காலமே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சார மேடையில் இத்தகைய மதப் பாகுபாட்டைத் தூண்டும் கருத்து வெளியிடப்பட்டிருப்பது கவலை அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும், ஹாடி அவாங்கின் கருத்து குறித்து மசீச, மஇகா, எம்ஐபிபி, கெராக்கான் கட்சிகள் ஏன் மௌனம் காக்கின்றன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அரசியல் ஆதாயத்திற்காகவும் தேர்தல் தொகுதிகளுக்காகவும் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் கொள்கைகளை விட்டுக்கொடுக்கக் கூடாது என்றார்.
எனவே, ஹாடி அவாங் தனது கருத்தை உடனடியாகத் திரும்பப் பெற்று, பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும்
தேசிய முன்னணி, தேசியக் கூட்டணி தலைவர்களும் இவ்விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் சிவமலர் கோரிக்கை விடுத்தார்.
மலாக்கா மக்கள் நாளை வாக்களிக்கும்போது வேட்பாளர்களை மட்டுமின்றி, மக்களை ஒன்றிணைக்கும் தலைமைத்துவத்தையும் மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் அரசியல் கட்சிகளையும் மதிப்பிட்டு முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 13, 2026, 4:38 pm
பரபரப்பான அரசியல் நடுவே கூடுகிறது அமைச்சரவை கூட்டம்: பிரதமர் அன்வார் தகவல்
November 13, 2026, 4:37 pm
16ஆவது மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தல்: அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்கப்போவது யார் ?
November 13, 2026, 3:50 pm
7 மாணவிகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகளை ஓய்வு பெற்ற ஆசிரியர் மறுத்து விசாரணை கோரினார்
November 13, 2026, 3:49 pm
அநீதி என்றால் அது அநீதிதான்; ஹாடி அவாங் தனது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும்: பிரகாஷ்
November 13, 2026, 3:16 pm
இரண்டு மாபெரும் நிகழ்வுகளுடன் மீண்டும் வந்துவிட்டது அப்சலூட் பசார் காயா ராயா விழா 2027
November 13, 2026, 3:15 pm
மலாக்கா மாநிலத் தேர்தல்: தேசிய முன்னணி - தேசியக் கூட்டணி 24 தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்தும்
November 13, 2026, 3:13 pm
அந்தோனி லோக்கின் ராஜினாமா குறித்து முடிவெடுக்க அவசரப்படத் தேவையில்லை: பிரதமர்
November 13, 2026, 12:16 pm
செம்பனை எண்ணெய் கலப்படம் தொடர்பான குற்றச்சாட்டு: விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க PKFZ தயார்
November 13, 2026, 11:27 am
