செய்திகள் மலேசியா
செம்பனை எண்ணெய் கலப்படம் தொடர்பான குற்றச்சாட்டு: விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க PKFZ தயார்
கிள்ளான்:
இறக்குமதி செய்யப்படும் செம்பனை எண்ணெய்யுடன் உள்நாட்டு எண்ணெயைக் கலந்து, மலேசியப் பொருளாக மீண்டும் ஏற்றுமதி செய்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கும் தணிக்கைக்கும் முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக கிள்ளான் துறைமுக சுதந்திர வர்த்தக மண்டலம் (PKFZ) தெரிவித்துள்ளது.
PKFZ தலைவர் லிம் லிப் எங் இதனை உறுதிப்படுத்தினார்.
தங்களது நிர்வாகம் சுதந்திர வர்த்தக மண்டலச் சட்டத்தின் அடிப்படையில் செயல்படுவதாகவும், எண்ணெயின் தரம், தூய்மை, விதிமுறை இணக்கம் தொடர்பான அமலாக்க நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகளின் பொறுப்பில் உள்ளது.
மேலும், மலேசிய செம்பனை வாரியம், சீரிம், மலேசிய தனிமைப்படுத்தல், ஆய்வு சேவைகள் துறை உள்ளிட்ட அமைப்புகளுக்குத் தேவையான அறிக்கைகள், தணிக்கை தொடர்பான உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.
இறக்குமதி செய்யப்பட்ட செம்பனை எண்ணெய்யுடன் உள்நாட்டு எண்ணெயைக் கலக்கும் நடவடிக்கை உண்மையாக இருந்தால், அது மலேசியாவின் பாமாயில் ஏற்றுமதியாளர்களையும் சர்வதேச சந்தையில் நாட்டின் நற்பெயரையும் பாதிக்கக்கூடும் எனத் தொழில்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, இத்தகைய கலப்படம் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் காடழிப்பு தடுப்பு விதிமுறையான EUDR-இன் கீழ் எண்ணெயின் மூலத்தை உறுதிப்படுத்துவதில் சிக்கல் ஏற்படலாம்.
மேலும், மலேசிய நிலையான பாமாயில் சான்றிதழான MSPO மீதான நம்பகத்தன்மையும் பாதிக்கப்படக்கூடும் என மேரிடைம் நெட்வோர்க் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ ஆர். ஜெயேந்திரன் எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 13, 2026, 4:38 pm
பரபரப்பான அரசியல் நடுவே கூடுகிறது அமைச்சரவை கூட்டம்: பிரதமர் அன்வார் தகவல்
November 13, 2026, 4:37 pm
16ஆவது மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தல்: அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்கப்போவது யார் ?
November 13, 2026, 3:50 pm
7 மாணவிகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகளை ஓய்வு பெற்ற ஆசிரியர் மறுத்து விசாரணை கோரினார்
November 13, 2026, 3:49 pm
அநீதி என்றால் அது அநீதிதான்; ஹாடி அவாங் தனது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும்: பிரகாஷ்
November 13, 2026, 3:16 pm
இரண்டு மாபெரும் நிகழ்வுகளுடன் மீண்டும் வந்துவிட்டது அப்சலூட் பசார் காயா ராயா விழா 2027
November 13, 2026, 3:15 pm
மலாக்கா மாநிலத் தேர்தல்: தேசிய முன்னணி - தேசியக் கூட்டணி 24 தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்தும்
November 13, 2026, 3:13 pm
அந்தோனி லோக்கின் ராஜினாமா குறித்து முடிவெடுக்க அவசரப்படத் தேவையில்லை: பிரதமர்
November 13, 2026, 2:39 pm
ஹாடி அவாங் தனது கருத்தைத் திரும்பப் பெறுவதுடன் மன்னிப்புக் கோர வேண்டும்: சிவமலர் வலியுறுத்தல்
November 13, 2026, 11:27 am
