செய்திகள் உலகம்
பெல்ஜியத்தில் புதிய கழிவுநீர் குழாய்க்காகத் தோண்டும்போது, 9 மில்லியன் யூரோ மதிப்புள்ள தங்கம் கண்டெடுப்பு
பிரஸ்ஸல்ஸ்:
பெல்ஜியத்தில் கழிவுநீர்க் குழாய் அமைக்க பள்ளம் வெட்டியபோது 9 மில்லியன் யூரோ மதிப்பிலான தங்கப் புதையல் கண்டெடுக்கப்பட்டது.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகருக்கு வடமேற்கே சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சின்ட் - கில்லிஸ்-டெண்டர்மொன்டே பகுதியில், ஒரு மதுபான உற்பத்தி ஆலை கடந்த 1899 முதல் 1970 வரை செயல்பட்டு வந்தது.
தற்போது, அந்தப் பழமையான கட்டிடம் முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. தற்போது அந்தக் கட்டிடம் ‘சிஏடபிள்யூ ஊஸ்ட் லான்டரன்’ என்ற சமூக நல அமைப்புக்கு சொந்தமாக உள்ளது. அங்கு புதிய அலுவலகங்கள், குடியிருப்புகளை கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில், அண்மையில் அங்குள்ள பழைய கழிவுநீர் குழாய்களை மாற்றி புதிய கழிவுநீர் குழாய்களை அமைப்பதற்காக பூமியில் பள்ளம் தோண்டினர். அப்போது, அங்கு தங்கப் புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அந்தப் புதையலில் சுமார் 50 தங்கக் கட்டிகளும், நூற்றுக்கணக்கான தங்க நாணயங்களும் இருந்தன. இவற்றின் மதிப்பு சுமார் 9 மில்லியன் யூரோக்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடம் 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அப்பகுதியில் செல்வந்தராக இருந்த மதுபானத் தயாரிப்பு குடும்பத்தைச் சேர்ந்த தியோபிலஸ் வான் ஆஷே என்பவருக்காக கட்டப்பட்டது தெரியவந்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 11, 2026, 1:15 pm
புதைக்கப்பட்டு 24 மணி நேரத்திற்கு பின் 11 மாதக் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது
November 11, 2026, 11:46 am
காசாவில் இஸ்ரேல் ராணுவத்தினரின் தொடர் தாக்குதல் காரணமாக பொதுமக்கள் எழுவர் பலி
November 11, 2026, 11:39 am
அதிக சத்தத்துடன் பாட்டு போட்டதைத் தட்டி கேட்ட போலிஸ் அதிகாரியை பாராங்கத்தியுடன் இருவர் துரத்திய சம்பவம்
November 10, 2026, 10:45 am
BREAKING NEWS: Nvidia CEO சீன நிர்வாகியுடன் கள்ளத் தொடர்பு: ஒப்புக்கொண்டார் ஜென்சன் ஹுவாங்
November 9, 2026, 3:02 pm
காட்டுத்தீ அணைக்கும் முயற்சியில் ஹெலிகாப்டர் விழுந்தது: ஒருவர் பலி
November 7, 2026, 12:38 pm
மூங்கிலை மென்றபடி அமெரிக்க ரசிகர்களைக் கவர்ந்த சீனப் பாண்டாக்கள்
November 6, 2026, 7:20 pm
இஸ்ரேல் அரசாங்கம் யார் கையில்?: நாளை மறுநாள் முடிவு தெரியும்
November 6, 2026, 2:51 pm
லாஸ் ஏஞ்சல்ஸ் மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நித்யா ராமன் தேர்வு
November 5, 2026, 9:42 pm
