செய்திகள் உலகம்
காசாவில் இஸ்ரேல் ராணுவத்தினரின் தொடர் தாக்குதல் காரணமாக பொதுமக்கள் எழுவர் பலி
காசா:
காசா முனையின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய அண்மைக்காலத் தொடர் தாக்குதல்களில் குறைந்தது எழுவர் உயிரிழந்தனர்.
ஹமாஸ் நிர்வாகத்தின்கீழ் இயங்கும் காசா சிவில் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள தகவலின்படி, காசா நகரின் ஜெய்ட்டூன் பகுதியில் இஸ்ரேல் படையினர் நடத்திய சோதனையில் 13 வயது சிறுவன் உட்பட இருவர் பலியாகினர்.
அதே நகரில் நடந்த மற்றொரு சம்பவத்தில், இரும்புப் பட்டறை ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுவீச்சில் மூவர் உயிரிழந்தனர். மேலும், இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த கூடாரம் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.
இதற்கிடையே, காசாவின் தெற்குப் பகுதியிலுள்ள கான் யூனிஸ் பகுதிக்கு அருகே இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மற்றொருவர் பலியானதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல்களில் உயிரிழந்த ஏழு பேரின் உடல்களும் உள்ளூர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டதை அடுத்து, இந்த மரணங்களை மருத்துவமனை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து ஏஎஃப்பி செய்தி நிறுவனம் கேட்டபோது, குறிப்பிட்ட சில இடங்களில் 'ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை மட்டுமே' இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்த இஸ்ரேல் ராணுவம், கூடுதல் விவரங்களை தெரிவிக்கவில்லை.
கடந்த 2025 அக்டோபர் 10-ஆம் தேதி அமலுக்கு வந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேலும் ஹமாஸும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வரும் நிலையில், இந்த மோதல் நடந்துள்ளது. ஐ.நா-வால் உறுதிப்படுத்தப்பட்ட காசா சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, போர்நிறுத்தம் அமலானதிலிருந்து இதுவரை 1,590-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 11, 2026, 1:15 pm
புதைக்கப்பட்டு 24 மணி நேரத்திற்கு பின் 11 மாதக் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது
November 11, 2026, 11:39 am
அதிக சத்தத்துடன் பாட்டு போட்டதைத் தட்டி கேட்ட போலிஸ் அதிகாரியை பாராங்கத்தியுடன் இருவர் துரத்திய சம்பவம்
November 10, 2026, 10:45 am
BREAKING NEWS: Nvidia CEO சீன நிர்வாகியுடன் கள்ளத் தொடர்பு: ஒப்புக்கொண்டார் ஜென்சன் ஹுவாங்
November 9, 2026, 3:02 pm
காட்டுத்தீ அணைக்கும் முயற்சியில் ஹெலிகாப்டர் விழுந்தது: ஒருவர் பலி
November 7, 2026, 12:38 pm
மூங்கிலை மென்றபடி அமெரிக்க ரசிகர்களைக் கவர்ந்த சீனப் பாண்டாக்கள்
November 6, 2026, 7:20 pm
இஸ்ரேல் அரசாங்கம் யார் கையில்?: நாளை மறுநாள் முடிவு தெரியும்
November 6, 2026, 2:51 pm
லாஸ் ஏஞ்சல்ஸ் மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நித்யா ராமன் தேர்வு
November 5, 2026, 9:42 pm
Scoot விமானக் கழிவறையில் ரகசியக் கேமரா: சிக்கிய ஆடவர்
November 5, 2026, 4:36 pm
