நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அதிக சத்தத்துடன் பாட்டு போட்டதைத் தட்டி கேட்ட போலிஸ் அதிகாரியை பாராங்கத்தியுடன் இருவர் துரத்திய சம்பவம்

ஜாகார்த்தா: 

யோக்யகார்த்தா, சிலேமானில் அதிக சத்தத்துடன் பாட்டு போட்டதைத் தட்டிக்கேட்ட போலீசாரை, போதையில் இருந்த இருவர் அரிவாளுடன் துரத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாபர்சாரி பகுதியில் நடந்த இந்த அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதில், ஒளிரும் பச்சை நிற ஜாக்கெட் அணிந்திருந்த காவலரை ஒருவன் அரிவாளை தூக்கிக்கொண்டு சாலையில் வெறித்தனமாக துரத்துவது பதிவாகியுள்ளது.

அதிகாலை வரை சத்தம் தாங்க முடியாமல் பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில், Depok Barat காவல் நிலைய அதிகாரிகள் காலை 9.40 மணியளவில் சம்பவ இடத்திற்குச் சென்று சத்தத்தைக் குறைக்குமாறு அமைதியாக அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால், போதை தலைக்கேறியிருந்த அந்த நபர்கள் போலீசாரின் பேச்சைக் கேட்காமல், திடீரென ஆக்ரோஷமாக மாறி ஆயுதத்துடன் அவர்களைத் தாக்கத் துரத்தியுள்ளனர்.

இந்த மோதலில் ரோந்து போலீஸ் காரின் பக்கவாட்டு கண்ணாடி உடைந்ததுடன், அருகில் இருந்த ஒரு கடை பெட்டியும் நொறுக்கப்பட்டு பொதுச்சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டது.

நிலைமை கைமீறிப் போகவே, கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். பின்னரே, அந்த ஊர் பெரியவர் ஒருவரின் உதவியோடு நிலைமை ஒருவழியாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் எந்தவொரு காவலருக்கும் காயம் ஏற்படவில்லை. வன்முறையில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த அரிவாளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset