நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மூங்கிலை மென்றபடி அமெரிக்க ரசிகர்களைக் கவர்ந்த சீனப் பாண்டாக்கள்

அட்லாண்டா:

அமெரிக்காவின் அட்லாண்டா (Atlanta) விலங்குத் தோட்டத்தில் சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட இரண்டு ராட்சதப் பாண்டாக்கள் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

பிங் பிங் (Ping Ping), ஃபூ ஷுவாங் (Fu Shuang) ஆகிய பாண்டாக்கள் நேற்று முதன்முறையாகப் பார்வையாளர்களைச் சந்தித்தன.

அவை மூங்கில்களைச் சாப்பிட்டுக்கொண்டே ஓய்வெடுத்தபடி பார்வையாளர்களை மகிழ்வித்தன.

அவை கடந்த செப்டம்பர் மாதம் சீனாவின் செங்டு (Chengdu) நகரிலிருந்து அமெரிக்காவுக்குக் கொண்டுவரப்பட்டன.

அந்தப் பாண்டக்களுக்காக விலங்குத் தோட்டத்தில் வசதிகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

பாண்டாக்களின் உணவுக்காக அட்லாண்டாவிலேயே மூங்கில்கள் வளர்க்கப்படுகின்றன.

சீனா பல ஆண்டுகளாக மற்ற நாடுகளுடனான உறவை வலுப்படுத்தப் பாண்டாக்களை வெளிநாட்டு விலங்குத் தோட்டங்களுக்கு அனுப்பிவருகிறது.

அந்த நடவடிக்கை 'பாண்டா அரசதந்திரம்' என்று அழைக்கப்படுகிறது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset