நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

Scoot விமானக் கழிவறையில் ரகசியக் கேமரா: சிக்கிய ஆடவர்

சிங்கப்பூர்:

ஜப்பானிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த ஸ்கூட் (Scoot) விமானத்தின் கழிவறையில் கேமராவை மறைத்து வைத்ததாக ஆடவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.

பிரிட்டனைச் சேர்ந்த 52 வயது ஹியூ லட்லி (Hugh Lutley) அந்தரங்கத்தைப் படம்பிடித்ததாகவும் அந்த ஆதாரத்தைப் பிறகு அழித்ததாகவும் சொல்லப்பட்டது.

அக்டோபர் 7ஆம் தேதி ஜப்பானின் ஒசாக்கா (Osaka) நகரிலிருந்து சிங்கப்பூருக்குத் திரும்பிய விமானத்தில் சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது.

கழிவறைக்குள் கேமராவை வைத்துக் கைத்தொலைபேசிச் செயலி மூலம் கேமராவைத் தொலைவிலிருந்து பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

விமானச் சிப்பந்தி ஒருவர் கழிவறைக்குச் சென்றபோது கேமராவைக் கண்டதாகக் காவல்துறை கூறியது.

உடனே அதை அகற்றி அதுகுறித்து சக சிப்பந்தியிடம் புகார் அளித்தார்.

லட்லி கேமராவைக் கழிவறையிலிருந்து எடுக்கச் சென்றபோது கேமரா அகற்றப்பட்டதை உணர்ந்தார்; உடனே அவர் செயலியைக் கைத்தொலைபேசியிலிருந்து அகற்றியதாகக் காவல்துறை தெரிவித்தது.

அந்தரங்கத்தைப் படம்பிடிக்கும் குற்றத்துக்கு ஏழாண்டுவரை சிறை, அபராதம், பிரம்படி அல்லது இவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட தண்டனைகள் விதிக்கப்படலாம்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset