நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இஸ்ரேல் அரசாங்கம் யார் கையில்?: நாளை மறுநாள் முடிவு தெரியும்

டெல் அவிவ்:

இஸ்ரேலிய அதிபர் ஐசாக் ஹெர்ஸாக் (Isaac Herzog), அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பை யாரிடம் ஒப்படைக்கவிருக்கிறார் என்பதை வரும் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 8 ஆம் தேதிப்அறிவிக்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த இரு நாள்களாகத்  ஹெர்ஸாக் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹூவைவிட (Benjamin Netanyahu) எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசன்கோட்டுக்கு (Gadi Eisenkot) அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் சட்டப்படி ஒரு அரசாங்கத்தை அமைக்கும் திறன் யாருக்கு உள்ளது என்பதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு தமக்கு இருப்பதாக இஸ்ரேலிய அதிபர் சொன்னார்.

கட்சிக் கூட்டணிகளுக்கு இடையிலும் அவற்றுக்குள்ளும் ஒருவரையொருவர் ஏற்க மறுக்கும் நிலை இருப்பதால், யாரால் அரசாங்கத்தை அமைக்க முடியும் என்பது இன்னும் தெளிவாகவில்லை என்றார் அவர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset