நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

லாஸ் ஏஞ்சல்ஸ் மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நித்யா ராமன் தேர்வு

லாஸ் ஏஞ்சல்ஸ்:

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழ் குடும்ப பின்னணி கொண்ட நித்யா ராமன் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் லாஸ் ஏஞ்சல்ஸின் அடுத்த மேயராக உள்ளார்.

தற்​போதைய லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸுக்கு எதிராக நித்யா ராமன் போட்டியிட்டார். இதில் 52 சதவீத வாக்குகளை பெற்று நித்யா ராமன் வெற்றி பெற்றார். இதன்மூலம் லாஸ் ஏஞ்சல்ஸின் முதல் இந்திய - அமெரிக்கர் என்ற அடையாளத்தை அவர் பெற்றுள்ளார். 

ஜனநாயக கட்சியை சேர்ந்த கரேன் பாஸுக்கு அரசியல் ரீதியான ஆதரவு அமோகமாக இருந்தது. முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் உட்பட பலர் தங்களது ஆதரவை அவருக்கு தெரிவித்திருந்தனர். 

கேரளாவைச் சேர்ந்த தமிழ் குடும்​பத்​தில் 1981-ல் பிறந்​தவர்​தான் நித்யா ராமன். இவருக்கு 6 வயது இருக்​கும்போது, பெற்​றோர் அமெரிக்கா​வுக்கு குடிபெயர்ந்​தனர்.

இவர் ஒரு காலத்தில் சென்​னைக்​குத் திரும்​பி, தூய்மை மற்​றும் சுகா​தார மேம்பாட்டுக்​காக ஒரு ஆராய்ச்சி நிறு​வனத்​தைத் தொடங்​கி​னார் என்பது குறிப்பிடத்தக்கது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset