நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காடேக்கில் நடராஜா வெற்றி பெற்றால் மட்டுமே நமது பிரதிநிதி மாநில அரசாங்கத்தில் இடம் பெறுவார்: டத்தோஸ்ரீ சரவணன்

காடேக்:

காடேக்கில் நடராஜா வெற்றி பெற்றால் மட்டுமே நமது பிரதிநிதி மாநில அரசாங்கத்தில் இடம் பெறுவார்.

இதை மனதில் வைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரே ஒரு நாள் இருக்கின்றன வேளையில், களப்பணி உச்சத்தைத் தொட்டுள்ளது.

காடேக் சட்டமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் நடராஜன் செல்லப்பாவை ஆதரித்து பிரச்சார நடவடிக்கையில்
ஈடுபடுவதற்காக நாடு முழுவதிலுமிருந்தும் மஇகா முக்கியத் தலைவர்கள் காடேக் தொகுதியில் குவிந்துள்ளனர்.

மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

ஆக  இந்தத் தொகுதியில் போட்டியிடுகின்ற மஇகா வேட்பாளர் நடராஜன் வெற்றி பெற்றால் அவர் நிச்சயமாக மலாக்கா மாநில ஆட்சிக் குழுவில் இடம் பெறுவார் என்பதால் அவரை அனைத்து இந்திய வாக்காளர்களும் ஆதரித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

மாநில அளவில் தேசிய முன்னணி வெற்றி பெற்று, இந்த தொகுதியில் மட்டும் எதிரணியில் போட்டியிடுகின்ற இந்திய வேட்பாளர் வெற்றி பெற்றால் அவர் ஆட்சிக் குழுவில் இடம் பெறும் வாய்ப்பில்லை.

ஆகையால் இந்திய வாக்காளர்கள் அனைவரும் தங்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து நடராஜாவை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று சரவணன் மேலும் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset