செய்திகள் மலேசியா
பெர்கேசோ I LINDUNG U ஊடக விருது விழா 2026: தமிழ் ஊடகவியலாளர்கள் மூவரின் குடும்பங்களுக்குக் கௌரவம்
கோலாலம்பூர்:
பாதிக்கப்பட்ட மூன்று தமிழ் ஊடகவியலாளர்களின் குடும்பங்களின் சேவையையும் தியாகத்தையும் போற்றும் வகையில், பெர்கேசொ அமைப்பின் 'i LINDUNG u 2026' ஊடக விருது வழங்கும் விழாவில் அவர்களுக்கு சிறப்பு கௌரவம் அளிக்கப்பட்டது
கோலாலம்பூர்ரெனைசன்ஸ் விடுதியில் நடைபெற்ற இவ்விருது விழா மற்றும் தீபாவளி கொண்டாட்ட நிகழ்வில் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு இச்சிறப்பு மரியாதையை வழங்கினார்.
50 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் பணியாற்றி, கடந்த அக்டோபர் 25 அன்று காலமான 'மக்கள் ஓசை' நாளிதழின் மூத்த ஆசிரியர் மறைந்த டாக்டர் ராஜன் பூபாலன் (பி.ஆர். ராஜன்) அவர்களின் குடும்பத்தினர் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும், கடந்த ஜூன் 16 அன்று பணியிடத்தில் காலமான 'மக்கள் ஓசை' பணியாளர் மறைந்த யோகேஸ்வரன் அழகன் அவர்களின் குடும்பத்தினரும் கௌரவிக்கப்பட்டனர். மறைந்த யோகேஸ்வரனின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு 'LINDUNG Pekerja' திட்டத்தின் கீழ் ஈமச்சடங்கு உதவித்தொகை மற்றும் சார்ந்திருப்போர் ஓய்வூதியம் பெறத் தகுதி பெற்றுள்ளனர்.
சுமார் 40 ஆண்டுகள் பெர்கேசொ சந்தாதாரராக இருந்து, தற்போது உடல்நலக்குறைவால் படுக்கையில் இருக்கும் 'மக்கள் ஓசை' முன்னாள் மனிதவள மேலாளர் இந்திரதேவி காளமேகம் அவர்களுக்கு மாதந்தோறும் நிரந்தர இயலாமை ஓய்வூதியம் மற்றும் இடைவிடா பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
நிகழ்வின் முத்தாய்ப்பாக ANUGERAH KENCANA KESUMA PERKESO எனும் உயரிய விருதினை நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் இன்டான் மைசூரா அகமட் கமல் எழுதிய "The Man Who Comes Knocking" என்ற கட்டுரை தட்டிச் சென்றார்
நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை மக்களுக்குச் சரியாகக் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்கள் முக்கிய பங்காளிகளாகத் திகழ்கின்றன என்றார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 12, 2026, 5:57 pm
காடேக்கில் நடராஜா வெற்றி பெற்றால் மட்டுமே நமது பிரதிநிதி மாநில அரசாங்கத்தில் இடம் பெறுவார்: டத்தோஸ்ரீ சரவணன்
November 12, 2026, 5:55 pm
மலாக்கா மாநிலத் தேர்தலில் இந்தியர்களின் ஆதரவு நம்பிக்கை கூட்டணிக்கு திரும்பும்: குணராஜ் நம்பிக்கை
November 12, 2026, 4:36 pm
ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து தேசிய முன்னணி வெளியேறக்கூடாது: நஸ்ரி அப்துல் அஸிஸ் கருத்து
November 12, 2026, 4:35 pm
GST வரியைக் கொண்டு வர வேண்டாம் எனும் நிலைப்பாட்டில் அரசியல் இல்லை: அன்வார் விளக்கம்
November 12, 2026, 9:11 am
