நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அந்தோனி லோக்கின் ராஜினாமா அரசாங்கத்திற்கு ஒரு பெரும் இழப்பு: டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து அந்தோனி லோக் விலகும் முடிவை அரசாங்கத்திற்கு ஒரு பெரும் இழப்பாகும்.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இவ்வாறு விவரித்தார்.

நான் வருத்தப்படுகிறேன். அவர் என் நல்ல நண்பர், அவர் என் அமைச்சரவை சகா.

நான் அவரை இழப்பேன், ஆனால் இது அவருடைய முடிவும் நிலைப்பாடும் ஆகும்.

அவர் மிகவும் கொள்கைப்பிடிப்புள்ளவர், அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது ஒரு பெரும் இழப்பு என்று இங்கு நடைபெற்ற பெர்கேசோ iLINDUNGu 2026 ஊடக விருதுகள் விழாவில் கலந்துகொண்ட பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தனது மீதமுள்ள சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதிக்கும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் முடிவைத் தொடர்ந்து, போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக விலகுவதாக லோக் நேற்று அறிவித்தார்.

மற்றொரு நிகழ்வில், அமைச்சரவை மாற்றத்தை அமல்படுத்துவது குறித்த முடிவு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது.

அது தொடர்பாக இதுவரை தனக்கு எந்த அறிவிப்பும் வரவில்லை என்றும் டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset