நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்கா மாநிலத் தேர்தலில் இந்தியர்களின் ஆதரவு நம்பிக்கை கூட்டணிக்கு திரும்பும்: குணராஜ் நம்பிக்கை

கோலாலம்பூர்:

மலாக்கா மாநிலத் தேர்தலில் இந்தியர்களின் ஆதரவு நம்பிக்கை கூட்டணிக்கு திரும்பும்.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் இந்த நம்பிக்கையை தெரிவித்தார்.

மலாக்கா மாநிலத் தேர்தலை முன்னிட்டு நம்பிக்கை கூட்டணி இந்திய தலைவர்களின் ஏற்பாட்டில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து சிறப்பு கூட்டமும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக வரும் சனிக்கிழமை நடைபெறும் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை மக்கள் உறுதி செய்ய வேண்டும்.

காரணம் நம்பிக்கை கூட்டணி தான் மத்திய அரசாங்கத்தில் உள்ளது. இக்கூட்டணியை சேர்ந்தவர் தான் பிரதமராக உள்ளார்.

மேலும் இந்திய சமுதாயத்தின் நலன் உட்பட தமிழ்ப்பள்ளி, ஆலயங்களுக்கு மடானி அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

அதே உதவிகளும் நலன்களும் மலாக்கா மாநில மக்களுக்கு இன்னும் கூடுதலாக கிடைக்க நம்பிக்கை கூட்டணி இங்கு ஆட்சியமைக்க வேண்டும்.

இதற்கு மலாக்கா மக்கள் வரும் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

இதுவே நம்பிக்கை கூட்டணி இந்திய தலைவர்களின் வேண்டுகோள் என்று குணராஜ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset