நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

GST வரியைக் கொண்டு வர வேண்டாம் எனும் நிலைப்பாட்டில் அரசியல் இல்லை: அன்வார் விளக்கம் 

கோலாலம்பூர்: 

நாட்டில் மீண்டும் ஜி.எஸ்.டி வரியை கொண்டு வர வேண்டாம் என்று தனது முடிவு எவ்வித அரசியல் சுயநலமும் இல்லை என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் கூறினார். 

ஜி.எஸ்.டி முறையால் நாட்டுக்கும் மக்களுக்கும் உண்மையாகவே பலன் கிடைக்கும் பட்சத்தில், அரசியல் காரணங்களுக்காக அரசாங்கம் அதைத் தவிர்க்க வேண்டிய அவசியமே இல்லை என்று அவர் சுட்டிக் காட்டினார்.

மக்களவையில் நடைபெற்ற அமைச்சர்களின் கேள்வி நேரத்தின் போது (PMQT), பெலுரான் நாடாளுமன்ற உறுப்பினர் ரொனால்ட் கியாண்டியின் துணைக் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இந்த விளக்கத்தை அளித்தார்.

முன்னதாக, அன்வார் ஜி.எஸ்.டி வரியை எதிர்க்கக் காரணம் ஏதேனும் அரசியல் நலன்களா என்று ரொனால்ட் கியாண்டி கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டால், அது சாமானிய மக்கள் மீது கூடுதல் சுமையையும் எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதை யாராலும் உறுதியாகக் கூற முடியுமா என்பதே தனது பிரதான கவலை என்று அன்வார் தெரிவித்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset