நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமர் அன்வாரை ஆதரிக்கவில்லையென்றால் ஜாஹித் துணைப்பிரதமர் பதவியிலிருந்து விலகலாம்: கோபிந்த் சிங் டியோ கருத்து 

கோலாலம்பூர்: 

நாட்டின் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மீது நம்பிக்கையோ அல்லது ஆதரிக்கவில்லை என்றால், துணைப் பிரதமர் பதவியில் இருந்து அகமது ஜாஹித் ஹமிடி உடனடியாக விலகலாம் என்று DAP கட்சியின் தலைவர் கோபிந்த் சிங் டியோ கூறினார். 

நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்று ஜாஹித் ஹமிடி விடுத்த கோரிக்கை முற்றிலும் தேவையற்றது என்றும், அதற்கான முழு அதிகாரம் பிரதமரிடமே உள்ளது என்றும் கோபிந்த் சாடினார்.

தற்போதைய அமைச்சரவை மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும், நாட்டின் பொருளாதார நிலைத்தன்மை காரணமாக மலேசியா வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முக்கியத் தேர்வாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அம்னோ மற்றும் தேசிய முன்னணி தலைவர்களுக்குப் பிரதமர் மீது நம்பிக்கை இல்லாவிட்டால், தேவையில்லாமல் அழுத்தம் கொடுக்காமல் அமைச்சரவை பதவிகளைத் துறந்துவிட்டு வெளியேறலாம் என்றார்.

பிரதமரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு மற்றும் அதிகார வரம்பின் அடிப்படையில்தான் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதால், அனைவரும் தலைமைக்குரிய மரியாதையை வழங்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

இதற்கிடையில், அமைச்சரவையில் மாற்றங்களைச் செய்வதை விட, நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு மக்களிடம் புதிய ஆணையைப் பெறுவதே சிறந்தது என்று ஜாகித் ஹமிதி அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா அசிசானின் பதவிக்காலம் முடிவடைவது மற்றும் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் அவர்களின் திடீர் ராஜிநாமா காரணமாகவே இந்த அமைச்சரவை மாற்ற ஊகங்கள் எழுந்துள்ளன.

எனினும், அமைச்சரவை மாற்றம் குறித்துப் பேசுவதற்கு இது சரியான நேரம் அல்ல என்றும், அதுபற்றித் தமக்கு இன்னும் முழுமையாகத் தெரியாது என்றும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் விளக்கம் அளித்துள்ளார்.

அந்தோனி லோக்கின் இடத்திற்கு யாரை நியமிப்பது என்பது முற்றிலும் பிரதமரின் முடிவிற்கே விடப்பட்டுள்ளதாகவும், இதில் டிஏபி கட்சி முழு சுதந்திரம் வழங்கியுள்ளதாகவும் கோபிந்த் சிங் தியோ தெளிவுபடுத்தினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset