செய்திகள் மலேசியா
முத்தியாரா இலகுரக ரயில் திட்டப் பணிகளுக்காக, ஜார்ஜ் டவுனில் உள்ள ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷா சாலைப் பாதைகள் 45 நாட்களுக்கு இரவில் மூடப்படும்
ஜார்ஜ் டவுன்:
முத்தியாரா இலகுரக ரயில் திட்டத்திற்கான மரம் வெட்டும் பணிகளுக்கு வசதியாக, ஜார்ஜ் டவுனில் உள்ள ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷா சாலையில் நவம்பர் 16 முதல் டிசம்பர் 31 வரை 45 நாட்களுக்குப் பகுதி நேரச் சாலை மூடப்படும் என மலேசிய விரைவுப் போக்குவரத்துக் கழகம் எம்.ஆர்.டி. கார்ப் அறிவித்துள்ளது.
இந்த மூடல்கள், ஜாலான் சுங்கை துவா சந்திப்புக்கும் மலேசிய அறிவியல் பல்கலைக்கழக மைதானத்திற்கும் இடையேயும், பத்து உபான் இராணுவ முகாமுக்கு அருகிலும் உள்ள பல்வேறு சாலைப் பாதைகளைப் பாதிக்கும்.
இது பெரும்பாலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரையிலான இரவு நேரங்களில் நடைபெறும். சாலைப் பயனாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், போக்குவரத்து சீராகச் செல்வதற்கும், அறிவிப்புப் பலகைகள், கூம்புகள், கொடி ஏந்திய காவலர்கள் உள்ளிட்ட போக்குவரத்து மேலாண்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எம்.ஆர்.டி. நிர்வாகம் அறிவித்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 12, 2026, 5:57 pm
காடேக்கில் நடராஜா வெற்றி பெற்றால் மட்டுமே நமது பிரதிநிதி மாநில அரசாங்கத்தில் இடம் பெறுவார்: டத்தோஸ்ரீ சரவணன்
November 12, 2026, 5:55 pm
மலாக்கா மாநிலத் தேர்தலில் இந்தியர்களின் ஆதரவு நம்பிக்கை கூட்டணிக்கு திரும்பும்: குணராஜ் நம்பிக்கை
November 12, 2026, 4:36 pm
ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து தேசிய முன்னணி வெளியேறக்கூடாது: நஸ்ரி அப்துல் அஸிஸ் கருத்து
November 12, 2026, 4:35 pm
GST வரியைக் கொண்டு வர வேண்டாம் எனும் நிலைப்பாட்டில் அரசியல் இல்லை: அன்வார் விளக்கம்
November 12, 2026, 10:46 am
பெர்கேசோ I LINDUNG U ஊடக விருது விழா 2026: தமிழ் ஊடகவியலாளர்கள் மூவரின் குடும்பங்களுக்குக் கௌரவம்
November 12, 2026, 9:11 am
