நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வீட்டுக் காவலில் இருக்கும்போது நஜிப்பின் நெருங்கிய குடும்பத்தினர் அவருடன் தங்கலாம்: நாடாளுமன்றத்தில் விளக்கம் 

கோலாலம்பூர்:

கடுமையான வீட்டுக் காவல் நிபந்தனைகளின் கீழ், மலேசியாவின் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ  நஜிப் ரசாக் தனது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுடன் வசிக்க அனுமதிக்கப்படுகிறார். மேலும், அவர் தனிப்பட்ட கைபேசிகளைப் பயன்படுத்தவோ அல்லது சமூக ஊடகங்களில் தோன்றவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

மன்னிப்பு வாரியத்தால் விதிக்கப்பட்ட இந்தக் கட்டுப்பாடுகள், நஜிப்பின் வசிப்பிடம், நடமாட்டம், தகவல் தொடர்புகளைக் கட்டுப்படுத்துகின்றன என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுதீன் நசுதியன் இஸ்மாயில் நாடாளுமன்றத்தில் விளக்கினார்.

எழுத்துப்பூர்வமான அனுமதி இல்லாமல் அவரால் வசிப்பிடத்தை மாற்றவோ அல்லது வீட்டை விட்டு வெளியேறவோ முடியாது. மேலும், விருந்தினர்களை வரவேற்பதற்கு முன் அனுமதி தேவைப்படுகிறது.

அதுமட்டுமின்றி, தகவல் தொடர்பு சாதனங்களின் பயன்பாடு, சிறைத்துறையால் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டவற்றுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset