நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து தேசிய முன்னணி வெளியேறக்கூடாது: நஸ்ரி அப்துல் அஸிஸ் கருத்து 

பெட்டாலிங் ஜெயா: 

ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து தேசிய முன்னணி வெளியேறக்கூடாது.

16ஆவது பொதுத்தேர்தல் முன்கூட்டியே நடத்தப்பட வேண்டும் என்பதால் தேசிய முன்னணி இந்த தவற்றை செய்யக்கூடாது என்று என்று முன்னாள் அமைச்சர் நஸ்ரி அப்துல் அஸிஸ் நினைவுப்படுத்தினார். 

தேசிய முன்னணி 16ஆவது பொதுத்தேர்தலைச் சந்திக்க தயாராக இருந்தாலும் 2022ஆம் ஆண்டு முதல் மாமன்னரின் உத்தரவின் பேரில் ஒற்றுமை அரசாங்கத்தில் அங்கம் வகித்தது 

16ஆவது பொதுத்தேர்தல் வரை தேசிய முன்னணி ஒற்றுமை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் என்று தாம் எதிர்ப்பார்ப்பதாக அவர் சொன்னார். 

ஒரு வேளை நம்பிக்கை கூட்டணி நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தைத் தாராளமாக கலைக்கலாம் என்று அவர் விளக்கம் அளித்தார். 

எதிர்வரும் சனிக்கிழமை மலக்கா மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேசிய முன்னணி- நம்பிக்கை கூட்டணி கட்சிகள் தனித்தனியே களத்தில் தேர்தலைச் சந்திக்கின்றன

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset