நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போலிஸ் அதிகாரி மீதான தாக்குதலுக்கு பிரதமர் கடும் கண்டனம்

கோலாலம்பூர்:

கெப்போங்கில் ஒரு வெளிநாட்டவரால் தாக்கப்பட்டதில் போலிஸ் அதிகாரி ஒருவரின் வலது மணிக்கட்டு உடைந்த சம்பவத்திற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடும் கண்டனம் தெரிவித்தார்.

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு எதிரான எந்தவொரு குற்றமும் வன்முறையும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்கவும், பணியில் உள்ள சட்ட அமலாக்க அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றவாளி யாராக இருந்தாலும் எந்தவொரு குற்றச் செயலுக்கும் எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சம்பந்தப்பட்ட அதிகாரி விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன் என்று அவர் நேற்று ஒரு முகநூல் பதிவில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset