நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சந்தேக நபரால் வெட்டப்பட்ட போலிஸ் அதிகாரியின் வலது மணிக்கட்டை மீண்டும் பொருத்த அறுவை சிகிச்சை: ஷசாலி

கோலாலம்பூர்:

கெப்போங்கில் உள்ள டேசா அமான்புரியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், அரிவாளுடன் வந்த நபர் ஒருவரால் வெட்டப்பட்டதில், ஒரு போலிஸ் அதிகாரி வலது மணிக்கட்டு துண்டிக்கப்பட்டது.

அந்த உறுப்பை மீண்டும் பொருத்துவதற்காக, அதிகாரி கோலாலம்பூர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

26 வயதான லான்ஸ் கார்ப்பரல் நிலைமை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போலிஸ் தலைவர் டத்தோ ஷசாலி கஹார் கூறினார்.

தலை, உடலில் பலத்த காயங்களுக்கு உள்ளான பாதிக்கப்பட்டவர், முதற்கட்ட சிகிச்சைக்காக முதலில் செலாயாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

பின்னர் அறுவை சிகிச்சைக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக அவர் கூறினார்.

அவரது கையைக் காப்பாற்றும் முயற்சியில் அவர் கோலாலம்பூர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

எனவே, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் என்று அவர்  கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset