நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போலிசாரின் கையை துண்டாகும் வரை வெட்டிய அந்நிய நாட்டு நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

கோலாலம்பூர்:

கெப்போங்கில் உள்ள டேசா அமான்புரியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், போலிசாரின் வலது மணிக்கட்டை துண்டாகும் வரை வெட்டிய அந்நிய நாட்டு நபர், போலிசாரால் சுடப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

நேற்று மாலை 7.30 மணி முதல் 8 மணிக்குள், அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகிலுள்ள ஒரு விளையாட்டு மைதானத்திற்கு அருகே காணப்பட்ட சந்தேக நபர், மீண்டும் ஒரு அரிவாளால் அதிகாரியைத் தாக்கியதால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று சிலாங்கூர் போலிஸ் தலைவர் டத்தோ ஷாசாலி கஹார் கூறினார்.

தற்காப்புக்காகவும், ஒருவரைக் கைது செய்யும் நோக்கிலும், போலிசாரால் சந்தேக நபரை நோக்கிப் பலமுறை சுட்டனர்.

இருப்பினும், அந்தத் துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபருக்குக் காயம் மட்டுமே ஏற்பட்டது.

நிலைமையைக் கண்ட போலிசார் அவரைச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர் என்று செலாயாங் மருத்துவமனையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset