நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்கா மக்களின், குறிப்பாக இளைஞர்களின் எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய ஒரே கூட்டணி தேசிய முன்னணி: டத்தோஸ்ரீ நஜிப்

மலாக்கா:

மலாக்கா மக்களின், குறிப்பாக இளைஞர்களின் எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய ஒரே கூட்டணி தேசிய முன்னணியாகும்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் இதனை வலியுறுத்தியதாக அவரின் மகள் நூர்யானா நஜ்வா கூறினார்.


16ஆவது மலாக்கா மாநிலத் தேர்தலை முன்னிட்டு தனது தந்தை டத்தோஸ்ரீ நஜிப் மலாக்கா மக்களுக்கு ஒரு செய்தியை விட்டுச் சென்றதாக அறிவித்தார்.

குறிப்பாக தேசிய முன்னணி என்பது மக்களின், குறிப்பாக இளைஞர்களின் எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய ஒரு கூட்டணி என்பதை தனது தந்தை மலாக்கா மக்களுக்கு நினைவூட்டியதாக அவர் கூறினார்.

டத்தோஸ்ரீ நஜிப் எப்போதும் தேசிய முன்னணி வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறார். அவர் அக்கூட்டணி மீது மிகுந்த அக்கறை கொண்டவர்.

அரசியலில் உள்ள தியாகங்களை அவர் அறிவார். மேலும், வெளியே சென்று மக்களுக்கு உதவுமாறு எனக்கும் என் சகோதரர்களுக்கும் அவர் எப்போதும் அறிவுரை கூறுவார்.

குறிப்பிட்ட செய்தி எதுவும் இல்லை.

ஆனால் இளைஞர்களின் எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்க தேசிய முன்னணி தான் சிறந்த கூட்டணி என்பதை மலாக்கா மக்களுக்கு அவர் தெரிவிக்க விரும்புகிறார்  என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset